ரயில் ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சுகாதாரமான உணவு கிடைப்பதில் சிக்கல்

முன்னுரிமை அடிப்படையில் சிலிண்டர் வழங்க கோரிக்கை
ரயில் ஓட்டுநர் ஓய்வறைகளில் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு: சுகாதாரமான உணவு கிடைப்பதில் சிக்கல்
Updated on
1 min read

சென்னை: ர​யில் ஓட்​டுநர் ஓய்​வறை​களில் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ள​தால், ஓட்​டுநர்​களுக்கு சுகா​தா​ர​மான உணவு கிடைப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது. எனவே, இங்கு முன்​னுரிமை அடிப்​படை​யில், காஸ் சிலிண்​டர் வழங்க மத்​திய அரசுக்கு கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

மத்​திய கிழக்கு நாடு​களில் நடை​பெறும் போரால், இந்​தி​யா​வில் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாடு ஏற்​பட்​டுள்​ளது. வீட்டு உபயோக சிலிண்​டர்​கள் வழங்​கப்​பட்​டாலும், வணி​கப் பயன்​பாட்​டுக்​கான காஸ் சிலிண்​டர் விநி​யோகம் நிறுத்​தப்​பட்​டுள்​ளது.

இதனால், பல இடங்​களில் உணவகங்​கள் மூடப்​பட்​டுள்​ளன. இதற்​கிடையே, காஸ் சிலிண்​டர்​கள் தட்​டுப்​பாடு ரயில் ஓட்​டுநர்​களின் ஓய்​வறை​களில் தற்​போது எதிரொலிக்​கத் தொடங்​கி​யுள்​ளது.

வெளியூ்ர்களுக்கு ரயில்களை இயக்கும் ரயில் ஓட்​டுநர்​கள், கார்​டு​கள் பணி முடிந்து ஓய்​வெடுக்க வசதி​யாக, நாடு முழு​வதும் 558 ரயில் ஓட்​டுநர் ஓய்​வறை​கள் உள்​ளன.

தெற்கு ரயில்​வே​யில், சென்னை எழும்​பூர், சென்ட்​ரல், சென்னை கடற்​கரை, தாம்​பரம், திரு​வொற்​றியூர், ஈரோடு, திருச்​சி, விழுப்​புரம், மதுரை, காட்​பாடி, சேலம், கோவை உள்பட பல்​வேறு இடங்​களில் ஓட்​டுநர் ஓய்​வறை​கள் உள்​ளன.

உயர் தரத்​தில் பராமரிக்​கப்​படும் இந்த அறை​களில் அவர்​களுக்கு மானிய விலை​யில் சுகா​தா​ர​மான உணவு வழங்​கப்​படு​கிறது. தற்​போது, ரயில் ஓட்​டுநர் ஓய்​வறை​களில் காஸ் சிலிண்​டர் தட்​டுப்​பாட்​டால், அவர்​களுக்கு உணவு கிடைப்​ப​தில் சிக்​கல் ஏற்​பட்​டுள்​ளது.

இது குறித்​து, தெற்கு ரயில்வே பொது​மேலா​ள​ருக்கு தட்​சிண ரயில்வே ஊழியர்​கள் சங்க பொதுச்​செய​லா​ளர் ஏ.எம். பேபி ஷக்​கிலா கடிதம் எழு​தி​யுள்​ளார். அதில், ரயில்வே கோட்​டங்​களில் உள்ள பல்​வேறு ஓய்​வறை​களில் (Running Rooms) ஓட்​டுநர் மற்​றும் இயக்​கப் பணி​யாளர்​களுக்கு உணவு கிடைக்​காத காரணத்​தி​னால், தற்​போது கடுமை​யான சிரமங்​களை எதிர்​கொண்டு வரு​கின்​றனர்.

ரயில் ஓட்​டுநர்​கள் தங்​கள் பணி மற்றும் ஓய்வு நேரங்​களி​ல் குறித்த நேரத்​துக்கு சுகா​தா​ர​மான உணவு கிடைப்​ப​தற்கு ஓய்வு அறையையே முழு​மை​யாகச் சார்ந்​திருக்​கின்​றனர். தற்​போதைய சூழல் பணி​யாளர்​களுக்​குப் பெருத்த சிரமத்​தை​யும், மன உளைச்​சலை​யும் ஏற்​படுத்​தி​யுள்​ளது.

ஏனெனில், நீண்ட மற்​றும் களைப்​பூட்​டும் பணி நேரங்​களுக்​குப் பிறகு அவர்​களால் முறை​யான உணவைப் பெற இயல​வில்​லை. இது அவர்​களின் உடல்நலன், பணிச் செயல்​பாட்டை பாதிக்கும் எனவே, ஓட்​டுநர் ஓய்​வறை​களில் காஸ் சிலிண்​டர் தடை​யின்றி கிடைப்​பதை உறுதி செய்ய வேண்​டும். தேவை​யான உணவு தயாரித்து வழங்​கு​வதை உடனடி​யாக மேற்​கொள்ள வேண்​டும் என்று தெரி​வித்​துள்​ளார்.

இது குறித்​து, ஓய்​வு​பெற்ற ரயில்வே தொழிற்​சங்​கத் தலை​வர் மனோகரன் கூறுகை​யில், ‘‘ரயில் ஓட்​டுநர்​கள் ஓய்​வறை​கள் ஏ,பி,சி என்​றும் தரம் பிரிக்​கப்​பட்​டுள்​ளன. இந்த ஓய்​வறை​களுக்கு முன்​னுரிமை அடிப்​படை​யில் காஸ் சிலிண்​டர் வழங்க வேண்​டும்” என்​றார்​.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in