

மார்க்சிஸ்ட் மாநில செயலாளர் பெ.சண்முகம்
சென்னை: அரசு அலுவலகங்களில் வாரத்தில் ஒரு நாள் மரபு உடை அணிய வேண்டும் என்ற அறிவிப்பு தேவையற்ற விவாதங்களை எழுப்பும் என்பதால், அமைச்சரின் அந்த ஆலோசனையை அரசு கைவிட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் வலியுறுத்தியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழ்நாடு தமிழ்வளர்ச்சித்துறை அமைச்சர் ராஜ்மோகன் வாரத்தில் ஒரு நாள் அரசு ஊழியர்கள் மரபு உடை அணிந்து அலுவலகத்திற்கு வர வேண்டுமென அரசாணை வெளியிட இருப்பதாக தெரிவித்துள்ளார். இது முற்றிலும் பொருத்தமற்ற நடவடிக்கை என்பதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயற்குழு சுட்டிக்காட்ட விரும்புகிறது.
மாநிலத்திற்குள்ளேயே மரபு உடை என்பது வேறுபட்டதாகவும் இருக்கிறது. தங்களுடைய மரபு உடையை ஒவ்வொருவரும் அணிந்து வருவது என்பது தேவையற்ற விவாதங்களை எழுப்பும், கேள்விக்குள்ளாக்கப்படும்.
இத்தகைய ஆடை குறித்த வழிகாட்டுதல்கள் நிகழ்கால சமூகச் சூழலில் தவறான முறையில் விரிவாக்கப்படுவதற்கும் வாய்ப்பு இருக்கிறது. இவற்றையெல்லாம் கணக்கில் கொண்டு அமைச்சரின் அந்த ஆலோசனையை கைவிட வேண்டும்” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.