நகராட்சித் துறை பணிநியமன முறைகேடு: கே.என்.நேரு மேல்முறையீட்டு மனு தள்ளுபடி

கே.என்.நேரு

கே.என்.நேரு

Updated on: 
1 min read

புது டெல்லி: நக​ராட்சித் துறை அதி​காரிகள் நியமனத்​தில் நடைபெற்ற முறைகேடுகள் தொடர்​பாக வழக்குப் ப​திவு செய்ய, லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு பிறப்பித்த உத்தரவை மறு ஆய்வு செய்ய மறுத்த சென்னை உயர்​நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் முன்​னாள் அமைச்​சர் கே.என்.நேரு தாக்கல் செய்த மேல்​முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. இந்த உத்தரவின் மூலம், கே.என்.நேரு மீது வழக்குப்பதிவு செய்வதற்கான தடைகள் நீங்கியுள்ளன.

கடந்த திமுக ஆட்​சிக் காலத்​தில் நக​ராட்சி நிர்​வாக துறை​யில் 2,538 உதவி பொறி​யாளர்கள் மற்​றும் இளநிலை பொறியாளர்​கள் உள்​ளிட்ட அதி​காரி​கள் நியமனத்​துக்கு ரூ.634 கோடி லஞ்​சம் பெறப்​பட்​டுள்​ள​தாகவும், இது குறித்து வழக்​குப் பதிவு செய்​யுமாறு, தமிழக டிஜிபி-க்கு, அமலாக்​கத் துறை கடிதம் அனுப்பியது.

இந்த கடிதத்​தின் அடிப்படை​யில், வழக்குப்​பதிவு செய்ய லஞ்ச ஒழிப்​புத் துறைக்கு உத்​தர​விடக்கோரி அதிமுக எம்.பி. இன்​ப​துரை தாக்​கல் செய்த மனுவை ஏற்று, வழக்​குப் பதிய உயர் நீதிமன்றம் உத்​தரவிட்​டது.

இதனிடையே, தனது தரப்பு வாதங்​களை கேட்​காமல் பிறப்​பிக்​கப்​பட்ட இந்த உத்தரவை மறு ஆய்வு செய்​யக்​கோரியும் முந்​தைய ஆட்​சி​யில் தாக்​கல் செய்​யப்​பட்ட மனுவை, தற்​போதைய அரசு வாபஸ் பெற முடி​யாது எனவும், அரசுக்கு அந்த அதி​காரம் இல்லை எனவும் கூறி கே.என்.நேரு மனுத்தாக்கல் செய்திருந்தார். இதை விசா​ரித்த சென்னை உயர் ​நீதி​மன்​றம் அவரின் மனுவை தள்​ளு​படி செய்து உத்​தர​விட்​டது.

இதையடுத்து, சென்னை உயர் நீதி​மன்ற உத்​தரவை எதிர்த்து கே.என்.நேரு தரப்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் மேல்​முறையீட்டு மனு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மனுவானது நீதிபதிகள் தீபங்கர் தத்தா மற்றும் ஷீல் நாகு ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

அமலாக்கத்துறை பகிர்ந்து கொண்ட ஆதாரங்களின் அடிப்படையில், சென்னை உயர் நீதிமன்றத்தின் இரண்டு உத்தரவுகளிலும் தலையிட எந்த முகாந்திரமும் இல்லை என்று கூறி, உச்ச நீதிமன்ற அமர்வு கே.என்.நேருவின் மேல்முறையீட்டு மனுவை தள்ளுபடி செய்தது.

இந்த வழக்கில் நீதிபதிகள் அளித்த உத்தரவில், “வழக்கில் தொடர்புடைய கே.என்.நேரு தனது துறைக்கு அமைச்சராக இருந்துள்ளார். எனவே முறைகேட்டுக்கு பின்னால் யார் யார் இருக்கிறார்கள் என்பது கண்டறியப்பட வேண்டும். எனவே அவர் மீது வழக்குப் பதிவு செய்வது அவசியம். அவர் இந்த வழக்கின் விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும்” என்று தெரிவித்தனர்.

<div class="paragraphs"><p>கே.என்.நேரு</p></div>
“தவெக ஆட்சியில் சிறு குறைகள் இருக்கத்தான் செய்கின்றன” - அமைச்சர் அருண்ராஜ் ஒப்புதல்

X