பெண் காவலருக்கு பாலியல் தொந்தரவு: புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன் பணிநீக்கம்

ஆளுநர் உத்​தரவின்பேரில் நடவடிக்கை
புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன்

புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன்

Updated on: 
1 min read

புதுச்சேரி: பெண் காவலருக்கு பாலியல் தொந்​தரவு அளித்த விவகாரத்​தில், துணைநிலை ஆளுநரின் உத்​தரவுப்​படி காரைக்​காலில் பணி​யாற்றி வந்த புதுச்​சேரி எஸ்பி சுப்​பிரமணி​யன் பணிநீக்​கம் செய்​யப்​பட்​டுள்​ளார்.

புதுச்​சேரி காவல் துறை​யில் எஸ்.பி.யாக பணி​யாற்​றிய​வர் சுப்​பிரமணி​யன். இவர் 2024-ம் ஆண்​டில் காரைக்​காலில் எஸ்பியாக பணி​யாற்​றியபோது, திரு​மண​மான பெண் காவலர் ஒரு​வருக்கு பாலியல் தொந்​தரவு கொடுத்​த​தாக புகார் எழுந்​தது. பின்​னர் புதுச்​சேரிக்கு பணி​யிட மாற்​றம் செய்​யப்​பட்டு சென்ற போதிலும், தொடர்ந்து பெண் காவலருக்கு தொல்லை கொடுத்து வந்​த​தாக கூறப்​படு​கிறது.

இது​குறித்து பெண் காவலரின் தாயார் புகார் அளித்​தும் உரிய நட​வடிக்கை எடுக்​காததால், அவர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் வழக்கு தொடர்ந்​தார். எஸ்பி மீது நட​வடிக்கை எடுக்​காதது குறித்து அடுத்​தடுத்த விசா​ரணைகளில் நீதி​மன்​றம் தொடர்ச்​சி​யாக கேள்வி எழுப்​பியது. விசாகா குழு அறிக்​கையை தாக்​கல் செய்​யுமாறு கேட்​டது.

இந்​நிலை​யில், புதுச்​சேரி துணை நிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்​தர​வின்​படி, கடந்த செப்.24-ம் தேதி எஸ்பி சுப்​பிரமணி​யன் பணி​யிடை நீக்​கம் செய்​யப்​பட்​டார். அதன் பின்​னரும் அவர் மீது வழக்​குப்​ப​திவு செய்​யாதது குறித்து நீதி​மன்​றம் கேள்வி எழுப்​பியது.

இதையடுத்து அவர் மீது பாலியல் துன்​புறுத்​தல், பாலியல் சார்ந்த தவறான செய்​கைகள் மூலம் பெண்​களை அவ​மதித்​தல், கொலை மிரட்​டல் விடுத்​தல் உள்​ளிட்ட 7 பிரிவு​களின் கீழ் காரைக்​கால் நகர காவல் நிலை​யத்​தில் செப்.28-ம் தேதி வழக்​குப்​ப​திவு செய்​யப்​பட்​டது.

இந்த வழக்​கில் நிபந்​தனை முன்​ஜாமீன் பெற்ற சுப்​பிரமணி​யன், நீதி​மன்ற உத்​தரவுப்​படி காரைக்​கால் நகர காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட்டு வந்​தார்.

இந்​நிலை​யில், துணைநிலை ஆளுநர் கைலாஷ்நாதன் உத்​தர​வின்​பேரில் எஸ்பி சுப்​பிரமணி​யனை பணி நீக்​கம் செய்து தலை​மைச்​செயலர் சரத் சவு​கான் நேற்று உத்​தர​விடப்​பட்​டுள்​ளார். சுப்​பிரமணி​யனின் பணிக்​காலம் பிப்​ரவரி மாதத்​துடன் நிறைவடைய உள்ள நிலை​யில் அவர் பணிநீக்​கம் செய்யப்பட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>புதுச்சேரி எஸ்பி சுப்பிரமணியன்</p></div>
முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி, உறவினர் வீடுகளில் போலீஸார் சோதனை - முழு விவரம்

X