முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி, உறவினர் வீடுகளில் போலீஸார் சோதனை - முழு விவரம்

அனுமதித்ததை விட கூடுதலாக கனிமங்களை வெட்டியதாக வழக்கு பதிவு
முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். படம்: நா.தங்கரத்தினம்

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். படம்: நா.தங்கரத்தினம்

Updated on: 
2 min read

மதுரை: குவாரி​யில் அனுமதித்த அளவை விட கூடுதலாக கனிம வளங்​களை வெட்டி எடுத்​த​தாக, முன்​னாள் வணிகவரித் துறை அமைச்​சர் பி.மூர்த்தி மீது வழக்​குப் பதிவு செய்த மாவட்​டக் குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார், அவரது வீடுகள் மற்​றும் உறவினர் வீடுகளில் 4 மணி நேரத்​துக்​கும் மேலாக சோதனை செய்​தனர்.

மதுரை மாவட்​டம், வாடிப்​பட்டி அரு​கிலுள்ள சத்​திரவெள்​ளாளப்​பட்டி பகுதி​யில் முன்​னாள் அமைச்​சர் மூர்த்​திக்கு சொந்​த​மான பட்டா இடம் உள்​ளது. இந்த இடத்​தில் கல்​கு​வாரி நடத்த 2019 முதல் 2014-ம் ஆண்டு வரை அரசு அனுமதி​யுடன் குத்​தகைக்கு விடப்​பட்​டது. இக்​கு​வாரி​யில் அனுமதிக்​கப்​பட்ட அளவை விட கூடுதலாக செம்​மண், சரளைக் கற்​கள் போன்ற கனிம வளங்​கள் வெட்டி எடுக்​கப்​பட்​ட​தாக, பி.மூர்த்தி மற்​றும் அவரது உறவினர்​கள் மீது புகார் எழுந்​தது.

இது தொடர்​பாக, வரு​வாய்த் துறை​யினர் நடத்​திய ஆய்​வில் ரூ.5.39 கோடிக்கு அரசுக்கு இழப்பு ஏற்​படுத்​தி​ய​தாக, கனிமவளத் துறைக்கு அறிக்கை சமர்ப்​பித்​தனர். இதன் அடிப்​படை​யில், முன்​னாள் அமைச்​சர் பி.மூர்த்தி, அவரது மைத்​துனர்​கள் பூவந்​தி​யைச் சேர்ந்த ராஜாமணி, பாலமேட்​டைச் சேர்ந்த செந்​தில்​குமார் மற்​றும் அனந்​தகுமார் ஆகியோர் மீது மதுரை மாவட்​டக் குற்​றப்​பி​ரிவு போலீ​ஸார் 2 வழக்​கு​களை பதிவு செய்​தனர்.

இந்த வழக்​கு​கள் தொடர்​பாக, மதுரை அய்​யர் பங்​களா எழில் நகரில் உள்ள பி.மூர்த்​தி​யின் வீடு, மைத்​துனர்​களான ராஜாமணி, செந்​தில்​குமார் மற்​றும் கட்​சி​பிர​முகர் தன்​ராஜ் ஆகியோரது வீடுகளி​லும் நேற்று காலை 7 மணி முதல் டிஎஸ்பி பொன்​னரசு தலை​மையில் 15-க்​கும் மேற்​பட்ட போலீ​ஸார் சோதனை மேற்​கொண்​டனர். மூர்த்தி முன்​னிலை​யில் நடந்த இந்த சோதனை 4 மணி நேரம் நடந்​தது.

தகவலறிந்த திமுக மாநகர மாவட்​டச் செய​லா​ளர் கோ.தளபதி, புறநகர் தெற்கு மாவட்ட செய​லா​ளர் எம்.மணிமாறன், தலைமை செயற்​குழு உறுப்​பினர் வழக்​கறிஞர் ஆர்.பாலாஜி, மாநக​ராட்சி திமுக கவுன்​சிலர்​கள் குழு தலை​வர் ஜெயராம் உள்​ளிட்ட திமுக நிர்​வாகி​கள், தொண்​டர்​கள் ஏராளமானோர் பி.மூர்த்​தி​யின் வீட்​டருகே திரண்​ட​தால் பரபரப்பு ஏற்​பட்​டது.

குத்​தகைக்கு விட்​டேன்: செய்​தி​யாளர்​களிடம் பி.மூர்த்தி கூறிய​தாவது: சத்​திரவெள்​ளாளபட்​டி​யிலுள்ள எனக்​குச் சொந்​த​மான பட்டா இடத்​தில் குவாரி நடத்த ஒப்​பந்த அடிப்​படை​யில் 2019 முதல் 5 ஆண்​டுகளுக்கு ராஜாமணி, ஆனந்​த​ராஜ் ஆகியோ​ருக்கு மாவட்ட ஆட்​சி​யரின் முறை​யான அனுமதி​யுடன் குத்​தகைக்கு விடப்​பட்​டது. ஆனால், அந்த இடத்​தில் உகந்த கற்​கள் கிடைக்​க​வில்லை என்​ப​தால், 2021-ல் ஆனந்​த​ராஜ் குவாரியை கைவிட்​டார். ராஜாமணிக்​கும் கற்​கள் கிடைக்​க​வில்லை.

இதையடுத்து, அரு​கில் இருந்த எனது பட்டா இடத்​தையும் அவர்​களுக்கு குத்​தகைக்கு கொடுத்​தேன். அந்த இடத்​தில் மண் எடுத்​திருப்​ப​தாக, உண்​மைக்கு புறம்​பாக என் மீது போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்​துள்​ளனர். இது குறித்து எனக்கு எது​வும் தெரியாது என ஏற்​கெனவே கோட்​டாட்​சி​யரிடம் விளக்​கம் கொடுத்து இருக்​கிறேன். இது தொடர்​பான வழக்​கில், எனது இடத்தை முறை​யாக அளந்து ஒப்​படைக்க நீதிபதி உத்​தரவு வழங்​கி​யுள்​ளார்.

இதையெல்​லாம் பொருட்​படுத்​தாமல், தற்​போது எனது பட்டா இடத்​தில் மண் எடுத்​திருப்​ப​தாக பொய்​யான வழக்கு பதி​யப்​பட்​டுள்​ளது. இவ்​வழக்கை சட்​டரீதி​யாக அணுகு​வேன் என்றார்.

முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். படம்: நா.தங்கரத்தினம்

<div class="paragraphs"><p>முன்னாள் அமைச்சர் பி.மூர்த்தி வீட்டில் நடந்த சோதனையின்போது பாதுகாப்பில் ஈடுபட்ட போலீஸார். படம்: நா.தங்கரத்தினம்</p></div>
பல உடல் பிரச்சினைகளுக்குத் தூக்கம் மூலம் தீர்வு: ஐஏஎஸ் அதிகாரி வீ.ப.ஜெயசீலன் கருத்து

X