

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம், உலகங்காத்தான் கிராமத்தைச் சேர்ந்த தம்பதி அன்பழகன் - அன்னலெட்சுமி (40). இவர்களது வீட்டுக்கு அருகாமையில் உள்ளவரோடு கடந்த ஆகஸ்ட் 27-ம் தேதி பிரச்சினை ஏற்பட்டது.
இதுதொடர்பாக அன்னலட்சுமி கொடுத்த புகாரின் பேரில், கள்ளக்குறிச்சி போலீஸார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஆனால் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக் கூறப்படுகிறது.
இதற்கிடையே, கள்ளக்குறிச்சியில் நேற்று செய்தியாளர்களைச் சந்தித்த அன்னலெட்சுமி, “எங்கள் வழக்கு தொடர்பாக அக்.16-ம் தேதி கள்ளக்குறிச்சி டிஎஸ்பி கலையரசனை சந்தித்தோம். அப்போது அவர், எனது உடலமைப்பு குறித்து ஆபாசமாக பேசி, ஆசை வார்த்தைகளைக் கூறி பாலியல் சீண்டலில் ஈடுபட்டார்” என்று தெரிவித்தார்.