காரின் மீது மோட்டார் சைக்கிளை மோதி டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த ரூ.1.5 கோடி கொள்ளை

காரின் மீது மோட்டார் சைக்கிளை மோதி டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த ரூ.1.5 கோடி கொள்ளை
Updated on: 
1 min read

காஞ்சிபுரம்: காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள டாஸ்​மாக் கடைகளில் வாரந்​தோறும் தனியார் வங்கி முகவர்​கள் மூலம் விற்​பனைத் தொகை வசூலிக்​கப்​படு​கிறது. இதன்​படி சென்​னையைச் சேர்ந்த வங்கி முகவர் தாஸ் (52), வாடகைக் கார் ஓட்​டுநர் ஹபீப் ரஹ்​மான் ஆகியோர் நேற்று காஞ்​சிபுரம் மாவட்​டத்​தில் உள்ள 20-க்​கும் மேற்​பட்ட டாஸ்​மாக் கடைகளில் விற்​பனைத் தொகையை வசூலித்​துள்​ளனர்.

பின்​னர் வசூலான ரூ.1.5 கோடி பணத்​துடன் காரில், ஒரகடம் பகுதி​யில் வனப்​பகுதியை ஒட்​டியுள்ள டாஸ்​மாக் கடைக்​கும் நேற்று முன்​தினம் இரவு பணம் வசூலிக்​கச் சென்​றுள்​ளனர். அப்​போது தாஸ் பணம் வசூலிப்​ப​தற்​காக கடைக்​குள் சென்ற நிலை​யில், ஓட்​டுநர் ஹபீப் ரஹ்​மான் காரில் தனியாக இருந்​துள்​ளார். அந்த நேரத்​தில் இருசக்​கர வாக​னத்​தில் வந்த மர்ம நபர்​கள் காரின் பின்​புறம் மோதி செயற்​கை​யான விபத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளனர்.

உடனே காரி​லிருந்து இறங்​கிய ஓட்​டுநர் அவர்​களிடம் வாக்​கு​வாதத்​தில் ஈடு​பட்​டுள்​ளார். இந்​தச் சந்​தர்ப்​பத்​தைப் பயன்​படுத்​திக் கொண்ட மர்ம நபர்​கள் அவரது கவனத்தை திசை திருப்​பி​விட்டு அங்​கிருந்து செல்ல முயன்​றனர். அப்​போது இவர் அவர்​களை விரட்​டிச் செல்ல இன்​னொரு நபர் சுமார் ரூ.1.5 கோடி பணம் வைக்​கப்​பட்​டிருந்த காரைக் கடத்​திச் சென்​றுள்​ளார்.

பின்​னர் சுமார் 10 கி.மீ. தொலை​வில் தாம்​பரம் செல்​லும் வழி​யில் காரணித்​தாங்​கல் பகுதி​யில் உள்ள தனியார் பொறி​யியல் கல்​லூரி அருகே காரை நிறுத்​தி​விட்டு, அதி​லிருந்த பணத்​துடன் தப்​பிச் சென்​றுள்​ளனர். இது​குறித்து தகவலறிந்து வந்த ஒரகடம் போலீ​ஸார் காரை மீட்​டனர். மேலும் கொள்​ளை​யர்​கள் காரின் அருகே விட்​டுச் சென்​றதாகக் கூறப்​படும் ரூ.18 லட்​சத்​தையும் கைப்​பற்​றினர். இது​குறித்து ஒரகடம் போலீ​ஸார் வழக்​குப் பதிவு செய்து விசா​ரணை நடத்தி வரு​கின்​றனர்.

இதுகுறித்து ஓட்​டுநர் ஹபீப் ரஹ்​மான், வங்கி முகவர் தாஸ் ஆகியோரிடமும் விசா​ரணை நடத்​தப்​பட்டு வரு​கிறது.

காஞ்​சிபுரம் மாவட்ட காவல் கண்​காணிப்​பாளர் அர​விந்த் உத்​தர​வின்​படி கொள்​ளை​யர்​களைப் பிடிக்க பெரும்​புதூர் டிஎஸ்பி கீர்த்​திவாசன் தலை​மையில் 5 தனிப்​படைகள் அமைக்​கப்​பட்​டுள்​ளன.

காரின் மீது மோட்டார் சைக்கிளை மோதி டாஸ்மாக் கடைகளில் வசூல் செய்த ரூ.1.5 கோடி கொள்ளை
சட்டம் - ஒழுங்கை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டும்: தவெக அரசுக்கு பழனிசாமி வலியுறுத்தல்

X