இலங்கை கடற்படையினரால் மயிலாடுதுறை, சீர்காழி மீனவர்கள் 7 பேர் கைது

மீட்கக் கோரி வெளியுறவுத் துறை அமைச்சருக்கு முதல்வர் கடிதம்
இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்.

இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்.

Updated on
1 min read

நாகப்பட்டினம்: எல்லை தாண்டி மீன் பிடித்​த​தாகக் கூறி மயி​லாடு​துறை, சீர்​காழி மீனவர்கள் 7 பேரை இலங்கை கடற்​படை​யினர் நேற்று கைது செய்​தனர்.

நாகை மாவட்​டம் வேதா​ரண்​யத்தை அடுத்த கோடியக்​கரை படகுத் துறை​யில் வடகிழக்கு பரு​வ​மழைக் கால​மான அக்​டோபர் முதல் ஜனவரி வரை வெளியூர் மீன்​வர்​கள் தங்​கி, மீன்​பிடித் தொழிலில் ஈடு​படு​வது வழக்​கம்.

அந்த வகை​யில், இங்கு தங்​கி​யிருந்த மயி​லாடு​துறை மாவட்​டம் பெரு​மாள்​பேட்​டையைச் சேர்ந்த க.தேவ​ராஜ், பு.தர், சீர்​காழி அடுத்த புதுக்​குப்​பம் ர.சரண்​ராஜ், ந.கலை​வாணன் ஆகியோர் நேற்று முன்​தினம் ஒரு படகில் கடலுக்கு மீன்​பிடிக்​கச் சென்​றனர்.

இதே​போல, மற்​றொரு படகில் சீர்​காழியை அடுத்த வானகிரியை சேர்ந்த வ.ராஜேஷ், ரெ.சத்​தி​யா, ச.தனிவேல் ஆகியோர் மீன்​பிடிக்​கச் சென்​றனர். இவர்​கள் 7 பேரும் நெடுந்​தீவு அருகே மீன்​பிடித்​துக் கொண்​டிருந்​த​போது, அவர்​களை சுற்​றிவளைத்த இலங்கை கடற்​படை​யினர், எல்லை தாண்​டி வந்து மீன் பிடித்​த​தாகக் கூறி அனை​வரை​யும் கைது செய்​தனர்.

மேலும், அவர்​களது 2 படகு​கள் மற்​றும் உடமை​களும் பறி​முதல் செய்​யப்​பட்​டன. இலங்​கை​யில் நீதிபதி முன்​னிலை​யில் ஆஜர்​படுத்​தப்​பட்ட 7 பேரும், பின்​னர் சிறை​யில் அடைக்​கப்​பட்​டனர்.

90 மீனவர்கள்​... மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் எஸ்​.ஜெய்​சங்​கருக்​கு, முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் எழு​தி​யுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: தமிழகத்​தைச் சேர்ந்த மீனவர்கள் மீண்​டும் மீண்​டும் இலங்கை கடற்​படை​யின​ரால் கைது செய்​யப்​படு​வதும், அவர்​களது மீன்​பிடிப் படகு​கள் பறி​முதல் செய்​யப்​படு​வதும் தொடர்​வது மிகுந்த கவலை​யளிக்​கிறது. தற்​போது இலங்கை சிறை​யில் 90 மீனவர்கள் அடைக்​கப்​பட்​டுள்​ளனர்.

மேலும், 254 மீன்​பிடிப் படகு​கள் பறி​முதல் செய்​யப்​பட்​டுள்​ளன. தொடர் கைது நடவடிக்​கைகள் தமிழக மீனவர்​களிடையே அச்​சத்தை ஏற்​படுத்​தி​யுள்​ளது. தமிழக மீனவர்கள் இலங்​கை​யில் நீண்​ட​காலம் தடுப்​புக் காவலில் வைக்​கப்​படு​வ​தா​லும், படகு​களை ஒப்​படைக்​காத​தா​லும் அவர்​களது குடும்​பத்​தின் வாழ்​வா​தா​ரம் கேள்விக்​குறி​யாகி உள்​ளது.

எனவே, இலங்கை சிறை​யில் உள்ள மீனவர்​களை​யும், அவர்​களது படகு​களை​யும் மீட்​க​வும், கைது நடவடிக்​கைகளுக்கு முற்​றுப்​புள்ளி வைக்​க​வும் மத்​திய அரசு உரிய தூதரக நடவடிக்​கைகளை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு முதல்​வர் ஸ்டா​லின் வலி​யுறுத்​தி​யுள்​ளார்​.

<div class="paragraphs"><p>இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தமிழக மீனவர்கள்.</p></div>
மேஷம் முதல் மீனம் வரை: இன்றைய ராசிபலன் @ 22 ஜனவரி 2026

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in