

மேஷம்: குழப்பம் நீங்கி குடும்பத்தில் மகிழ்ச்சி தங்கும். புது வேலையில் சென்று அமர்வீர். நெருங்கிய உறவினர், நண்பர்கள் விரும்பி வந்து பேசுவர். திடீர் பயணங்கள் வரும். அரசாங்கத்தால் ஆதாயம் உண்டு. வியாபாரத்தில் லாபம் கிட்டும். அலுவலகத்தில் அமைதி காக்கவும்.
ரிஷபம்: நண்பரிடம் இருந்த பகை நீங்கும். பணவரவு திருப்தி தரும். உறவினர் மத்தியில் மதிப்பு, மரியாதை உயரும். பூர்வீக சொத்தை சீரமைத்து விரிவுபடுத்தி கட்டுவீர்கள். வேற்றுமொழி பேசுபவர்களால் ஆதாயம் கிடைக்கும். வியாபாரம், உத்தியோகத்தில் ஏற்றமுண்டு.
மிதுனம்: வேற்றுமொழி, மதத்தினர்களால் திருப்பம் உண்டாகும். தந்தைவழி உறவினர்களை பகைத்துக் கொள்ள வேண்டாம். குடும்பத்தினரின் விருப்பங்களை நிறைவேற்றுவீர்கள். அலுவலகத்தில் மதிப்பு கூடும். வியாபாரத்தை பெரிய அளவில் விரிவுபடுத்துவீர்கள்.
கடகம்: கடந்த காலத்தில் இழந்த நல்ல வாய்ப்புகளை நினைத்து வருந்துவீர்கள். குடும்ப உறுப்பினர்களிடம் கோபத்தை காட்டாதீர். அக்கம் பக்கத்தினரிடம் அன்பாக பழகவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் பார்க்கலாம். அலுவலகரீதியாக முக்கிய பிரமுகர்களை சந்திப்பீர்கள்.
சிம்மம்: தன்னம்பிக்கையுடன் செயல்பட்டு பணிகளை முடிப்பீர். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிட்டும். அவ்வப்போது இனம்புரியாத கவலைகள் மனதில் தொற்றிக் கொள்ளும். வியாபாரத்தில் நிதானம் தேவை. அலுவலகத்தில் விவாதங்களை தவிர்ப்பது நல்லது.
கன்னி: உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவி கிட்டும். குடும்ப உறுப்பினர்களின் விருப்பங்களை கேட்டறிந்து நிறைவேற்றுவீர். வியாபாரத்தில் மற்றவர்களுக்காக சில பொறுப்புகளை ஏற்பீர். அலுவலகத்தில் தான் உண்டு தன் வேலை உண்டு என்று இருக்க பழகிக் கொள்ளவும்.
துலாம்: நட்பு வட்டத்தை விரிவுபடுத்துவீர்கள். சகோதர வகையில் ஒற்றுமை பிறக்கும். விரும்பிய பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர்கள் ஆதரித்துப் பேசுவர். வாகனத்தை சரி செய்வீர். அலுவலகரீதியாக வெளியூர் பயணம் மேற்கொள்வீர். வியாபாரம் சிறக்கும்.
விருச்சிகம்: பணப்புழக்கம் அதிகரிக்கும். உறவினர்கள், நண்பர்கள் உங்களை கலந்தாலோசித்து சில முடிவுகள் எடுப்பர். சொத்து சம்பந்தப்பட்ட வழக்கில் நல்ல தீர்ப்பு வரும். அலுவலகத்தில் சக ஊழியர்களை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஏற்றம் காண்பீர்கள்.
தனுசு: அண்டை அயலாரின் ஆதரவு பெருகும். பழைய கடன் பிரச்சினைகளில் ஒன்று தீரும். உறவினர் மத்தியில் மதிப்பு உயரும். வியாபாரத்தை விரிவுபடுத்த முயற்சி மேற்கொள்வீர். பணியாட்கள் அனுசரணையாக நடந்து கொள்வர். அலுவலகத்தில் தேடிய ஆவணம் தென்படும்.
மகரம்: பிள்ளைகள் குடும்ப சூழலுக்கு தகுந்தாற்போல் பொறுப்பாக இருப்பர். பிரியமானவர்களுக்காக விட்டுக் கொடுப்பீர். வியாபாரத்தில் லாபத்தை இரட்டிப்பாக்கும் முயற்சியில் இறங்குவீர். அலுவலகத்தில் விவாதங்களை தவிர்க்கவும். மேலதிகாரிகளை பகைத்துக் கொள்ளாதீர்.
கும்பம்: குடும்பத்தினருக்குள் மனக்கசப்புகள் வரலாம். அரசு சம்பந்தப்பட்ட காரியங்களில் அவசரம் காட்டாதீர். அக்கம் பக்கத்தினரை அனுசரித்து நடந்து கொள்ளவும். வியாபாரத்தில் ஓரளவு லாபம் உண்டு. அலுவலகத்தில் உழைப்புக்கு ஏற்ற அங்கீகாரம் கிட்டும். மதிப்பு உயரும்.
மீனம்: புது முயற்சிகளில் ஆர்வம் காட்டுவீர். குடும்ப உறுப்பினர்களின் எண்ணங்களை பூர்த்தி செய்வீர்கள். சகோதர வகையில் மனஸ்தாபம் வரும். வியாபாரத்தில் பழைய வாடிக்கையாளர்கள் திரும்பி வருவார்கள். அலுவலகத்தில் அடுத்தவர் விஷயத்தில் தலையிடாதீர்.