ராமேசுவரம் - சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் நவீனமயம்: எல்எச்பி பெட்டிகள் இணைப்பு

ராமேசுவரம் - சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் நவீனமயம்: எல்எச்பி பெட்டிகள் இணைப்பு
Updated on: 
1 min read

ராமேசுவரம்: ராமேசுவரம் - சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் எல்எச்பி (LHB) தொழில்நுட்ப வசதிகொண்ட ரயிலாக மாற்றப்பட்டு இயக்கப்படுகிறது.

தெற்கு ரயில்வேயில் இயக்கப்படும் விரைவு ரயில்களில், பழைய பெட்டிகள் நீக்கப்பட்டு எல்எச்பி என்னும் நவீன ரயில் பெட்டிகள் இணைக்கப்படுகின்றன. இந்த பெட்டிகள் எளிதில் தீப்பிடிக்காது. அதிர்வு இல்லாமல் பாதுகாப்பாகவும், வேகமாகவும் செல்லும் வகையில் வடிவமைக்கப்பட்டு உள்ளன. அத்துடன் சொகுசு இருக்கைகள், மொபைல் போன் சார்ஜிங் வசதி, நவீன கழிவறை, டிஸ்க் பிரேக் உள்ளிட்ட வசதிகள் இருக்கும்.

எல்எச்பி இரண்டாம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் 80 இடங்களும், ஏசி பெட்டியில் தூங்கும் வசதி கொண்ட 72 இடங்களும் இருக்கும். முக்கிய வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் அனைத்தும் எல்எச்பி தொழில்நுட்ப வசதி கொண்ட ரயில்களாக தெற்கு ரயில்வே மாற்றம் செய்து வருகிறது.

அந்த வகையில், ராமேசுவரத்திலிருந்து சென்னைக்கு இயக்கப்படும் தினசரி சேது எக்ஸ்பிரஸ் ரயிலில் பெட்டிகளை எல்எச்பி பெட்டிகள் கொண்ட ரயிலாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது. ரயில் எண்: 22662 ராமேசுவரத்திலிருந்து தினந்தோறும் இரவு 9.10 மணிக்கு புறப்பட்டு மறுநாள் சென்னை எழும்பூருக்கு காலை 7.20 மணிக்கு வந்தடையும்.

ரயில் எண்: 22661 சென்னை எழும்பூரிலிருந்து தினந்தோறும் மாலை 05.55 மணிக்கு புறப்பட்டு மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ராமேசுவரத்திற்கு வந்தடையும்.

ராமேசுவரம் - சென்னை சேது எக்ஸ்பிரஸ் ரயில் நவீனமயம்: எல்எச்பி பெட்டிகள் இணைப்பு
ராமநாதபுரத்தில் ஒரு நாள் மழைக்கே சாலைகள், தெருக்களில் மழைநீர்: அமைச்சர் ராஜீவ் ஆய்வு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in