ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும்: அமைச்சர் வன்னியரசு

ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும்: அமைச்சர் வன்னியரசு
Updated on
1 min read

பரமக்குடி: ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும் என சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு தெரிவித்துள்ளார்.

தியாகி இமானுவேல் சேகரனின் 69-வது நினைவு நாள் பரமக்குடியில் உள்ள அவரது நினைவிடத்தில் அனுசரிக்கப்பட்டது. விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பாக சமூக நீதித்துறை அமைச்சர் வன்னியரசு மலர் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார்.

பிறகு செய்தியாளரிடம் அவர் கூறியதாவது: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பாக தமிழக சட்டப்பேரவையில் கோரிக்கை வைத்ததன் விளைவாகத்தான் இமானுவேல் சேகருனாருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது.

கே.என்.பாட்ஷாவின் அறிக்கையை பெற்றுக் கொண்ட பின்னர் ஆணவ படுகொலைகளை தடுப்பதற்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும், என்றார் அமைச்சர் வன்னியரசு.

ஆணவ படுகொலைக்கு தனி சட்டம் விரைவில் இயற்றப்படும்: அமைச்சர் வன்னியரசு
மகளிர் ஆசிய கோப்பை டி20 இறுதிக்கு முன்னேறியது இந்தியா!

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in