முதல்வரின் செயலாளர்களாக செந்தில்குமார், லட்சுமி பிரியா நியமனம்

முதல்வரின் செயலாளர்களாக செந்தில்குமார், லட்சுமி பிரியா நியமனம்
Updated on
1 min read

சென்னை: ​முதல்​வர் ஜோசப் விஜய்​யின் செய​லா​ளர்​களாக ப.செந்​தில்​கு​மார் மற்​றும் லட்​சுமிப்​பிரியா ஆகியோர் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர். சென்னை நேரு உள்​விளை​யாட்டு அரங்​கில் நேற்று நடை​பெற்ற விழா​வில் தமிழக முதல்​வ​ராக தவெக தலை​வர் ஜோசப் விஜய் பதவி​யேற்​றார்.

பதவி​யேற்பு நிகழ்​வுக்கு பிறகு தலை​மைச்​செயல​கம் வந்த அவர், முதல்​வ​ராக முறைப்​படி பொறுப்​பேற்​றார். அதைத் தொடர்ந்து முதல்​வருக்கு ஐஏஎஸ், ஐபிஎஸ் அதி​காரி​கள் பூச்​செண்​டு, புத்​தகங்​கள் கொடுத்து வாழ்த்து தெரி​வித்​தனர்.

இதையடுத்​து, முதல்வரின் செயலர் நிலை -1 மற்​றும் 2 ஆகிய பொறுப்​பு​களுக்​கான அதி​காரி​கள் நியமிக்​கப்​பட்​டனர். அதன்​படி, முதல்​வரின் செயல​ராக நிலை-1 சுகா​தா​ரத்​துறை செயல​ராக உள்ள ப.செந்​தில்​கு​மார் நியமிக்​கப்​பட்​டுள்​ளார்.

இவர், கடந்த அதி​முக ஆட்​சி​யில் முதல்​வ​ராக இருந்த பழனி​சாமி​யின் செயல​ராக இருந்​தவர் என்​பது குறிப்​பிடத்​தக்​கது. இதுத​விர ஊரக வளர்ச்​சித்​துறை செயலர் உள்​ளிட்ட பொறுப்​பு​களை வகித்​துள்​ளார்.

முதல்​வரின் செயலர் நிலை-2- ல் தற்​போது ஆதி​தி​ரா​விடர் நலத்​துறை செயல​ராக உள்ள லட்​சுமி பிரியா நியமிக்​கப்​பட்​டுள்​ளார். இதுத​விர, உள்​துறை, பொது, சட்​டம், மனித வள மேலாண்​மை, பள்​ளிக்​கல்​வி, ஊரக வளர்ச்​சி, தொழில், நெடுஞ்​சாலை, உயர்​கல்​வி, மகளிர் நலன் உள்​ளிட்ட பல்​வேறு துறை​களில் முதல்​வர் அலு​வல​கத்​துக்கு சார்பு செயலர், தனிச்​செயலர், பிரிவு அலு​வலர், உதவி பிரிவு அலு​வலர், தனி உதவி​யாளர், உதவி​யாளர், தட்​டச்​சர், பதிவுரு எழுத்​தர், அலு​வலக உதவி​யாளர் உள்​ளிட்ட பணி​யிடங்​களுக்கு அலு​வலர்​கள் நியமிக்​கப்​பட்​டுள்​ளனர்.

முதல்​வரின் செயலர்​களாக நியமிக்​கப்​பட்ட இரு ஐஏஎஸ் அதி​காரி​களும் உடனடி​யாக பொறுப்​பேற்​றுக் கொண்​டனர். இரு​வரும் தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெற்ற சட்​டம்​-ஒழுங்கு தொடர்​பான ஆலோ​சனைக் கூட்​டத்​தில் பங்​கேற்​றதுடன், தற்​காலிக பேர​வைத் தலை​வர் பதவி​யேற்பு விழா​விலும் முதல்​வருடன்​ இணைந்து பங்​கேற்​றனர்​.

முதல்வரின் செயலாளர்களாக செந்தில்குமார், லட்சுமி பிரியா நியமனம்
திருப்பத்தூர் தொகுதி தபால் வாக்கு வேறு தொகுதிக்கு மாறியது ஏன்? - தேர்தல் ஆணையம் பதிலளிக்க ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in