குதிரை பேர ​வழக்கு: நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு

குதிரை பேர ​வழக்கு: நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
Updated on
1 min read

சென்னை: தவெக எம்​எல்​ஏ-​விடம் குதிரை பேரம் நடத்​தி​ய​தாகத் தொடரப்​பட்ட வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி சென்னை முதன்மை அமர்வு நீதி​ மன்​றத்​தில் நேற்று சரண் அடைந்​து, முன்​ஜாமீன் பெற்​றார்.

தவெக ஆட்​சியை கவிழ்க்​கும் நோக்​கில் ஊத்​தங்​கரை தவெக எம்​எல்ஏ இளை​ய​ராஜா​விடம் குதிரை பேரத்​தில் ஈடு​பட்​ட​தாக திரு​நாவுக்​கரசு, கார்த்​திக், ரமேஷ், தியாக​ராஜன், நரேஷ் உள்​ளிட்ட 14 பேரை திரு​வல்​லிக்​கேணி போலீ​ஸார் கைது செய்​துள்ளனர்.

இந்த வழக்​கில் திமுக முன்​னாள் அமைச்​ச​ரான செந்​தில் பாலாஜி, அவரது சகோ​தரர் அசோக்​கு​மார் மீதும் குற்​றம்​சாட்​டப்​பட்ட நிலை​யில், அவர்​களுக்கு சென்னை உயர் நீதி​மன்​றம், ஜூலை 8 அன்று நிபந்​தனை முன்​ஜாமீன் வழங்​கியது.

மேலும், இந்த உத்​தரவு நகல் கிடைக்​கப்​பெற்ற நாளி்ல் இருந்து 15 நாட்​களுக்​குள் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் இரு​வரும் சரண் அடைந்து ரூ.25 ஆயிரத்​துக்​கான சொந்த ஜாமீன் மற்​றும் அதே தொகைக்​கான இருநபர் ஜாமீன் உத்​தர​வாதம் அளித்து முன்​ஜாமீன் பெறலாம் எனவும் அறி​வுறுத்​தி​யிருந்​தது.

இந்​நிலை​யில் குதிரை பேர வழக்​கில் உயர் நீதி​மன்​றம் விதித்த நிபந்​தனை​களின்​படி முன்​னாள் அமைச்​சர் செந்​தில் பாலாஜி தனது வழக்​கறிஞர் பரணிக்​கு​மாருடன் சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றத்​தில் நீதிபதி எஸ்​.​கார்த்​தி​கேயன் முன்​பாக நேற்று காலை 10.30 மணிக்கு சரண் அடைந்து ஜாமீன் உத்​தர​வாதத்தை தாக்​கல் செய்​தார்.

மாலை 3 மணிக்கு இந்த வழக்கை விசா​ரித்த நீதிப​தி, உத்​தர​வாதத்தை ஏற்று முன்ஜாமீன் வழங்​கி​னார். மேலும், இன்று (ஜூலை 25) முதல் திரு​வல்​லிக்​கேணி காவல் நிலைய விசாரணை அதி​காரி முன்​பாக ஆஜராக வேண்​டுமென செந்​தில் பாலாஜிக்கு நீதிபதி உத்​தர​விட்​டார். அதையடுத்து அவர் நீதி​மன்​றத்​தில் இருந்து புறப்​பட்​டுச் சென்​றார்.

செந்​தில் பாலாஜி​யின் சகோ​தரர் அசோக்​கு​மார், வேறு ஒரு வழக்​குக்​காக கரூர் சென்​றுள்​ள​தால் ஜூலை 27-ம் தேதி சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்றத்​தில்​ சரணடைவார் என தெரிவிக்​கப்​பட்​டது.

8 பேர் ஜாமீன் மனு தள்ளுபடி இதற்கிடையே இந்த வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 14 பேரில் திருநாவுக்கரசு, தியாகராஜன், ராஜேஷ், சீனிவாசன், செல்வன், ராஜசேகர், சேதுராஜ் மற்றும் கணேசன் ஆகிய 8 பேருக்கு ஜாமீன் கோரி சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டு இருந்தது.

இவர்களுக்கு ஜாமீன் வழங்க அரசு தரப்பில் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. அதையடு்த்து இந்த ஜாமீன் மனுக்களை தள்ளுபடி செய்து சென்னை முதன்மை அமர்வு நீதிபதி எஸ்.கார்த்திகேயன் உத்தரவிட்டுள்ளார்.

குதிரை பேர ​வழக்கு: நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி சரண் - முன்ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவு
குமரி, தென்காசி தவிர்த்து இதர பகுதிகளில் வசிப்போருக்கு காணிக்காரன், காணிக்கர் சான்று உடனடி ரத்து

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in