குமரி, தென்காசி தவிர்த்து இதர பகுதிகளில் வசிப்போருக்கு காணிக்காரன், காணிக்கர் சான்று உடனடி ரத்து

மாவட்ட ஆட்சியர்களுக்கு சமூக நீதித்துறை அறிவுறுத்தல்
குமரி, தென்காசி தவிர்த்து இதர பகுதிகளில் வசிப்போருக்கு காணிக்காரன், காணிக்கர் சான்று உடனடி ரத்து
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் கன்​னி​யாகுமரி மற்​றும் தென்காசி மாவட்​டத்​தில் செங்​கோட்டை மற்​றும் அம்​பாச​முத்​திரம் ஆகிய பகு​தி​களில் காணிக்​காரன் அல்​லது காணிக்​கர் சமூகத்​தைச் சேர்ந்​தவர்​கள் வசிக்​கின்​றனர்.

இந்​நிலை​யில், சென்னை உட்பட இதர 10 மாவட்​டங்​களில் வசிக்​கும் 954 பேருக்குகாணிக்​காரன், காணிக்​கர் என கடந்த காலங்​களில் சாதி சான்​றிதழ் வழங்​கப்​பட்​டிருப்​பது அரசின் கவனத்​துக்கு வந்​துள்​ளது. இதையடுத்து அந்த சான்​றிதழ்​களை ரத்து செய்ய மாவட்ட நிர்​வாகங்​களுக்கு சமூக நீதித்​துறை செயலர் நா.சுப்​பையன் அறி​வுறுத்​தி​யுள்​ளார்.

இதுதொடர்​பாக, மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு அவர் எழு​தி​யுள்ள கடிதத்தில் கூறியிருப்ப தாவது: கன்​னி​யாகுமரி மற்​றும் தென்​காசி மாவட்​டம் செங்​கோட்டை, அம்​பாச​முத்​திரம் தாலு​கா​வில் உள்​ளவர்​கள் மட்​டும், தமிழகத்​தின் பழங்​குடி​யினர் பட்​டியலில், காணிக்​காரன் அல்​லது காணிக்​கர் இனத்​தில் சேர்க்​கப்​பட்​டுள்​ளனர்.

எனவே, இப்​பகு​தி​களில் வசிப்​பவர்​களுக்கு மட்​டுமே காணிக்​காரன், காணிக்​கர் சாதி சான்​றிதழ் வழங்​கப்பட வேண்​டும். ஆனால், கடந்த 2018 ஜனவரி 1 முதல் 2026 மே 26-ம் தேதி வரை, வரு​வாய் மேலாண்மை ஆணை​யரகம் வழி​யாக, தமிழ்​நாடு மின்​னாளுமை முகமை மூலம், சென்​னை​யில் 40, செங்​கல்​பட்​டு-152, காஞ்​சிபுரம்​-244, கடலூர்​-197, கள்​ளக்​குறிச்​சி-4, மதுரை-3, ராம​நாத​புரம்​-203, திரு​வாரூர்​-30, வேலூர்​-43, விழுப்​புரம்​-38 என 954 பேருக்கு சான்றிதழ்கள் வழங்​கப்​பட்​டுள்​ளது தெரிய​வந்​துள்​ளது.

ஏற்​கெனவே கடந்த 2005-ம் ஆண்டு தமிழக அரசு வெளியிட்ட அரசாணை​யில், ஆதி​தி​ரா​விடர், பழங்குடியினர் சாதி சான்​றிதழ் வழங்​கு​வது தொடர்​பான அறி​வுறுத்​தல்​ வழங்​கப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, தமிழ்​நாடு பழங்​குடி​யினர் பட்​டியலில், வரிசை எண்​.7-ல் காணிக்​காரன் அல்​லது காணிக்​கர் சாதி சான்​றிதழானது கன்​னி​யாகுமரி மற்​றும் தென்​காசி​யில் செங்​கோட்​டை, அம்​பா ச​முத்​திரம் தாலு​காக்​களில் உள்​ளவர்​களைத் தவிர மற்ற மாவட்​டங்​களில் வசிப்​பவர்​களுக்கு இணை​யதளம் வழி​யாகவோ, நேரடி​யாகவோ முறை​கே​டாக வழங்​கப்​பட்​டிருந்​தால் உடனே ரத்து செய்து, அரசுக்கு தெரிவிக்​க வேண்​டும்​. இவ்​வாறு அதில்​ கூறப்​பட்​டுள்​ளது.

பழங்குடியினருக்கு சாதி சான்று

தமிழகம் முழு​வதும் சாதி சான்​றிதழ் கோரி விண்​ணப்​பிக்​கும் ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் எதிர்​கொள்​ளும் சிக்​கல்​களைக் களைந்​து, விரைந்து சாதி சான்​றிதழ் வழங்​கப்​படு​வதை உறுதி செய்​யும் நோக்​கில், சமூகநீ​தித் துறை சார்​பில் மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு கடிதம் அனுப்​பப்​பட்​டுள்ள​தாக அமைச்​சர் வன்​னியரசு தெரி​வித்​துள்​ளார்.

இதுகுறித்து மாவட்ட ஆட்​சி​யர்​களுக்கு சமூகநீ​தித் துறை செயலர் சுப்​பையா எழு​திய கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் மக்​களுக்கு சாதி சான்று வழங்​கு​வது தொடர்​பாக பல்​வேறு வழி​காட்​டு​தல்​களை ஒன்​றிணைத்து கையேடு வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

அதன்​படி, ஆதி​தி​ரா​விடர் மற்​றும் பழங்​குடி​யினர் சாதி சான்று கோரி விண்​ணப்​பிக்​கப்​படும் மனுக்​கள் மீது ஆதி​தி​ரா​விடர் இனத்​தவருக்கு 2 நாட்​களுக்​குள் வட்​டாட்​சி​ய​ராலும், பழங்​குடி​யினத்​தவருக்கு ஒரு வாரத்​துக்​குள் கோட்​டாட்​சி​ய​ராலும் சாதி சான்று வழங்​கப்பட வேண்​டும்.

தாமதித்தால் நடவடிக்கை

ஏதேனும் சந்​தேகம் ஏற்​பட்​டால் தீவிர விசா​ரணை மேற்​கொண்டு 15 நாட்​களுக்​குள் அம்​மனுக்​களின் மீது உரிய நடவடிக்கை எடுத்து அதன் விவரத்தை மனு​தா​ரருக்கு தெரிவிக்க வேண்​டும்.

காலம் தாழ்த்​தி​யும், உரிய நடவடிக்​கை​யும் எடுக்​காமலிருக்​கும் சான்​றிதழ் வழங்​கும் அலு​வலர்​கள் மீது துறைரீ​தியி​லான நடவடிக்கை எடுக்க, அனைத்து மாவட்ட ஆட்​சி​யர்​களும் தங்​கள் கட்​டுப்​பாட்​டில் உள்ள சான்​றிதழ் வழங்​கும் அலு​வலர்​களுக்கு உரிய அறி​வுறுத்​தல்​களை வழங்க வேண்​டும். இவ்​வாறு கடிதத்​தில் கூறப் பட்டுள்ளது.

குமரி, தென்காசி தவிர்த்து இதர பகுதிகளில் வசிப்போருக்கு காணிக்காரன், காணிக்கர் சான்று உடனடி ரத்து
தவெக எம்எல்ஏவிடம் குதிரை பேர புகார்: முன்ஜாமீன் உத்தரவாதத்தை தாக்கல் செய்தார் செந்தில் பாலாஜி

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in