கரூர் நெரிசல் விவகாரத்தில் சிபிஐ சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது: செந்தில்பாலாஜி கருத்து

கரூர் நெரிசல் விவகாரத்தில் சிபிஐ சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது: செந்தில்பாலாஜி கருத்து
Updated on
1 min read

கரூர்: சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது ஆச்​சரிய​மாக உள்​ளது என முன்​னாள் அமைச்​சர் செந்​தில்​பாலாஜி தெரிவித்துள்ளார். கரூரில் நேற்று அவர் செய்தியாளர்களிடம் கூறியது: கரூரில் ஒரு கட்சி நடத்​திய நிகழ்ச்சி ஏற்​பாடு​களை காவல் துறை​யும், மாவட்ட நிர்​வாக​மும் செய்​திருந்​தது.

இதில், சிபிஐ எனக்கு சம்​மன் அனுப்​பி​யுள்​ளது ஆச்​சரிய​மாக உள்​ளது. இருப்​பினும், அவர்​கள் விசா​ரணைக்கு ஒத்துழைப்பு வழங்​கு​வேன். கேள்வி​கள், விசா​ரணை எப்படி இருக்​கிறது என பார்ப்​போம்.

எனக்கு சிபிஐ சம்​மன் அனுப்​பி​யுள்​ளது குறித்து சிலர் விமர்​சித்​துள்​ளனர். எனக்கு சிபிஐ சம்​மன் அனுப்​பி​னால், அவர்​களுக்கு என்ன, மருத்​து​வ​மனை​யில் நானும், கட்​சி​யினரும் மீட்​புப் பணி​களை மேற்​கொண்​டிருந்​தோம்.

அப்​போது மருத்​து​வ​மனைக்கு வந்​திருந்த அனை​வருக்​குமே சம்​மன் அனுப்பி விசா​ரிக்​கலாமே? மணல் திருட்டை தடுக்​கிறேன் எனக் கூறிவிட்​டு, அதி​முக முன்​னாள் அமைச்​சரே சட்​ட​விரோத​மாக மணலை பதுக்கி வைத்​திருந்​தார்.

நான் 50 வயதில் 20 ஆண்​டு​கள் எம்​எல்ஏ, 10 ஆண்​டு​கள் கவுன்​சிலர் என 30 ஆண்​டு​கள் மக்​கள் பணி​யாற்றி வரு​கிறேன். ஒரு​வர் 5 ஆண்​டு​கள் மட்​டுமே பதவி​யில் இருந்​தார். அவர் 2016-ம் ஆண்டு தேர்​தலில் எப்​படி வெற்றி பெற்​றார் என அவரை எதிர்த்து போட்​டி​யிட்​ட​வரைத்தான் கேட்​க வேண்​டும்.

வாக்கு எண்​ணிக்கை நிறுத்​தப்​பட்டு 30 நிமிடங்​கள் கழித்து அவர் 441 வாக்​கு​கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்​ற​தாக அறிவிக்​கப்​பட்​டது. கரூர் மாவட்​டத்​தில் 2-வது முறை​யாக 4 தொகு​தி​களி​லும் உதயசூரியன் வெற்​றி​பெற்று சாதனை படைக்​கும். இவ்​வாறு அவர் தெரிவித்​தார்​.

கரூர் நெரிசல் விவகாரத்தில் சிபிஐ சம்மன் அனுப்பியது ஆச்சரியமாக உள்ளது: செந்தில்பாலாஜி கருத்து
ஒன்றுபட்டு உழைத்தால் தே.ஜ. கூட்டணி ஆட்சி: திருச்சி பொதுக்கூட்டத்தில் தலைவர்கள் நம்பிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in