

செந்தில் பாலாஜி
சென்னை: “என்னைப் பொறுத்தவரை கரூரும், கோவையும் உடலும் உயிரும் போல” என முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “நான் கரூரில் இருந்து அவரங்குறிச்சிக்கு சென்று தேர்தலில் நின்றபோது பயந்துகொண்டு சென்றேனா என்ன?. ஆனால் இப்போது தோல்வி பயத்தாலும் சாதனைகளை சொல்லி வாக்கு சேகரிக்க முடியாமலும் இந்த மாதரியான கருத்துகளை முன் வைக்கிறார்கள்.
தலைமை என்ன சொல்கிறதோ அதைச் செய்வதுதான் தொண்டனின் கடமை. எந்த இடத்திலும் எனக்கு இது வேண்டும் என்று நான் கேட்கமாட்டேன். என்னை பொறுத்தவரை கரூரும், கோவையும் இரு கண்களைப் போல. கரூரில் இருந்து கோவைக்கான அரசுப் பணிகளை முன்னெடுத்து செய்திருக்கிறோம். இனி கோவையில் இருந்து கரூரை பார்த்துக் கொள்வோம். திமுகவின் வெற்றி உறுதி செய்யப்பட்டுவிட்டது.
உடலில் உயிர் இருந்தால்தான், அந்த உடல் செயல்படும். என்னைப் பொறுத்தவரை கரூரும், கோவையும் உடலும் உயிரும் போல. என்னை இந்த உலகத்துக்கு அடையாளம் காண்பித்தது கரூர் தான். கரூரில் 50 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெறுவோம். கரூருக்கும், கோவைக்கும் தேவையானதை முதல்வர் செய்வார்” இவ்வாறு அவர் பேசினார்.