பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு

பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு
Updated on
1 min read

சென்னை: கடந்த அதி​முக ஆட்​சி​யில் போக்​கு​வரத்​துத் துறை​யில் பணம் பெற்​றுக்​கொண்டு பணி நியமனங்​கள் வழங்​கப்​பட்​ட​தாக பதி​யப்​பட்ட வழக்​கின் அடிப்​படை​யில் முன்​னாள் அமைச்​சர் செந்தில் பாலாஜி மற்​றும் அவரது சகோதரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக சட்​ட​விரோத பணப்​பரி​மாற்ற தடைச் சட்​டத்​தின்​கீழ் அமலாக்​கத் துறை வழக்கு பதிவு செய்​துள்​ளது.

இந்த வழக்​கில், செந்​தில் பாலாஜியின் சகோதரர் அசோக்​கு​மார் உள்​ளிட்​டோருக்கு எதி​ராக அமலாக்​கத்​துறை​யினர் கூடு​தல் குற்​றப்​பத்​திரிகை தாக்​கல் செய்​துள்​ளனர்.

இந்த குற்​றப்​பத்​திரி​கை​யை, சென்னை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் விசா​ரணைக்​காக கோப்​புக்கு எடுத்​துள்​ளது. தங்​கள் தரப்பு வாதத்தை கேட்காமல் கூடு​தல் குற்​றப்​பத்​திரிகையை முதன்மை அமர்வு நீதி​மன்​றம் கோப்​புக்கு எடுத்​துள்​ள​தால் அதை ரத்து செய்ய வேண்​டும் எனக் கோரி செந்​தில் பாலாஜி​யின் சகோதரர் அசோக்​குமார், கார்த்​தி​கேயன் ஆகியோர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத்​ தாக்​கல் செய்​திருந்​தனர்.

இந்த மனுவை விசா​ரித்த தலைமை நீதிபதி எம்​.எம்​.ஸ்ரீவஸ்​தவா மற்​றும் நீதிபதி ஜி. அருள்​முரு​கன் ஆகியோர் அடங்​கிய அமர்​வு, இதுதொடர்​பாக அமலாக்​கத்​துறை பதிலளிக்க உத்​தர​விட்​டு, வி​சா​ரணையை மார்ச் 4-ம் தேதிக்​கு தள்​ளி வைத்​துள்​ளது​.

பணப்பரிமாற்ற வழக்கில் செந்தில் பாலாஜி சகோதரர் மனுவுக்கு பதில் அளிக்க உத்தரவு
பாஜக நிர்வாகி அமர்பிரசாத் ரெட்டிக்கு கொலை மிரட்டல்: போலீஸார் தீவிர விசாரணை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in