திருமலையில் உள்ள தனியார் ஓட்டல்களில் காலிபிளவர் உணவு வகைகளுக்குத் தடை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

திருமலை: ​திரு​மலை​யில் காலிபிளவரில் செய்​யப்​படும் உணவு வகைகளுக்​கு, திருப்​பதி தேவஸ்​தானம் தற்​காலிக தடை விதித்​துள்​ளது.

திருப்​பதி ஏழு​மலை​யான் கோயிலில் தற்​போது தின​மும் 70 ஆயிரம் முதல் 80 ஆயிரம் பக்​தர்​கள் சுவாமி தரிசனம் செய்து வரு​கின்​றனர். திருப்​பதி தேவஸ்​தானம் சார்​பில் ஸ்ரீ வெங்​கடேஸ்​வரா அன்​ன பிர​சாத அறக்​கட்​டளை​யின் கீழ், பக்​தர்​களுக்கு இலவச அன்​ன​தானம் வழங்​கப்​பட்டு வரு​கிறது.

ஆனாலும், பக்​தர்​களின் வசதிக்​காகத் தனி​யார் ஓட்​டல்​களும் திரு​மலை​யில் உள்​ளன. இங்​கு, மதி​யம்,மாலை, இரவு நேரங்​களில் ‘சைனீஷ் புட்’ உணவை உண்ண பக்​தர்​கள் அதிக ஆர்​வம் காட்​டுகின்றனர். ஆனால், அதில் ருசிக்​காகச் சில ரசாயனங்​கள் கலப்​ப​தாக வந்த புகாரின் அடிப்​படி​யில், சைனீஸ் புட் திரு​மலை​யில் ஏற்​கெனவே தடை செய்​யப்​பட்​டுள்​ளது.

இந்​நிலை​யில், காலிபிளவர் (கோபி) ரைஸ், பக்​கோ​டா, மஞ்​சூரி என பல உணவு வகை​கள் பக்​தர்​களுக்கு ஓட்​டல்​களில் வழங்​கப்​பட்டு வருகின்றன. ஆனால், சில ஓட்​டல்​களில் காலிபிளவரில் புழுக்​கள் இருந்​த​தாகத் தொடர்ந்து புகார் வந்​தது.

இதனை தொடர்ந்​து, திருப்​பதி தேவஸ்​தான சுகா​தா​ரத் ​துறை அதி​காரி சோமண்ண ரமணா மற்​றும் அவருடைய உதவி​யாளர்​கள் திரு​மலை​யில் உள்ள ரெஸ்​டாரன்ட்​டு​கள், ஓட்​டல்​கள், பாஸ்ட் புட் மையங்​களில் சோதனை நடத்​தினர். பின்​னர், காலிபிளவர் சம்​பந்​தப்​பட்ட எந்​த வகை உணவு​களை​யும் தயாரித்து பக்​தர்​களுக்கு விநி​யோகம் செய்​யக் கூடாது என்று தற்​காலிக​மாக உத்​தர​விட்​டனர். ஆதலால், நேற்று முதல் திரு​மலை​யில் காலிபிளவர் உணவு வகைகளுக்​குத் தடை வி​திக்​கப்​பட்​டுள்​ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தமிழகத்தில் 2 பேருக்கு தேசிய நல்லாசிரியர் விருது: குடியரசுத் தலைவர் செப்.5-ம் தேதி வழங்குகிறார்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in