நாகை மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வராஜ் எம்.பி. வேண்டுகோள்

நாகை மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வராஜ் எம்.பி. வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: இலங்கை கடற்​படை​யின​ரால் கைது செய்​யப்​பட்​டு, பின்​னர் நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்ட நாகப்​பட்​டினம் மீனவர்​களை இந்​தி​யா​வுக்கு மீட்​டுவர மத்​திய வெளி​யுறவுத் துறை துரித நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும் என்று நாகப்​பட்​டினம் எம்​.பி. வை.செல்​வ​ராஜ் வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இது தொடர்​பாக நாகை எம்​.பி. வை.செல்​வ​ராஜ், மத்​திய வெளி​யுறவுத் துறை அமைச்​சர் ஜெய்​சங்​கருக்கு எழுதியுள்ள கடிதத்​தில் கூறி​யிருப்​ப​தாவது: கடந்த நவ. 3, 4-ம் தேதி​களில் இந்​தி​ய-இலங்கை கடல் எல்​லை​யில் மீன் பிடித்​துக் கொண்​டிருந்த நாகப்​பட்​டினம் மீனவர்​கள் 36 பேர் மற்​றும் மயி​லாடு​துறை தொகு​தி​யைச் சேர்ந்த சில மீனவர்​களை, எல்லை தாண்டி மீன்​பிடித்​த​தாகக் கூறி இலங்கை கடற்​படை​யினர் கைது செய்​து, சிறை​யில் அடைத்​தனர்.

பின்​னர், நவ. 17-ம் தேதி இலங்கை நீதி​மன்​றத்​தால் விடுவிக்​கப்​பட்ட மீனவர்​கள் அனை​வரும், தூதரக ஒப்​புதலுக்​காக இலங்​கை​யில் தொலை​தூர முகாம் ஒன்​றில் தங்க வைக்​கப்​பட்​டுள்​ளனர். அவர்​கள் இன்​னும் இந்​தி​யா​வுக்​குத் திரும்​ப​வில்​லை.

நைஜீரியா உள்​ளிட்ட பல்வேறு நாட்டு மக்​களும் அதே இடத்​தில் தங்​கி​யுள்​ள​தால், இந்​திய மீனவர்​கள் சரி​யான உணவு, தங்​குமிடம் கிடைக்​காமல் தவித்து வரு​கின்​றனர். கையில் பணம்​கூட இல்​லாத​தால் அவர்​கள் மிக​வும் சிரமப்​படு​கி​ன்​றனர். தங்​களது நிலைகுறித்த வீடியோ பதிவு​களை அவர்​கள் எங்​களுக்கு அனுப்பி வரு​கின்​றனர்.

மேலும், மீனவர்​களின் குடும்​பத்​தினர் மிக​வும் பதற்​றத்​தில் உள்​ளனர். இலங்​கை​யில் உள்ள மீனவர்​களை மீட்​டு, இந்​தி​யா​வுக்கு பாது​காப்​பாக அனுப்​பக் கோரி தொடர்ந்து போராட்​டங்​கள் நடை​பெற்று வரு​கின்​றன. மேலும், அந்​தக் குடும்​பங்​களின் வாழ்​வா​தா​ரம் பாதிக்​கப்​பட்டுள்​ளது. அவர்​களை மீட்​கக் கோரி இந்​திய தூதரகத்​துக்கு தமிழக அரசு கடிதம் எழு​தி​யும், நடவடிக்​கை​யும் எடுக்​க​வில்​லை.

எனவே, இந்த விவ​காரத்​தில் நேரடி​யாக தலை​யிட்​டு, இந்​தியமீனவர்​களை​யும், அவர்​களின் மீன்​பிடிப் படகு​களை​யும் இந்​தி​யா​வுக்கு விரைந்து அனுப்ப நடவடிக்கை எடுக்​கு​மாறு கேட்​டுக் கொள்​கிறேன். இவ்​வாறு கடிதத்​தில் குறிப்​பிட்​டுள்ளார்.

நாகை மீனவர்கள் நாடு திரும்ப நடவடிக்கை எடுக்க வேண்டும்: செல்வராஜ் எம்.பி. வேண்டுகோள்
வாக்குச்சாவடி அதிகாரிகளை மிரட்ட கூடாது: மாநில அரசுகளுக்கு உச்ச நீதிமன்றம் எச்சரிக்கை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in