

சென்னை: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை வெளியிட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது: உச்ச நீதிமன்றம் தேர்தல் பத்திர நன்கொடையை ரத்து செய்த நிலையில், அறக்கட்டளைகள் மூலமாக பாஜக 2024-25 ஆண்டில் மட்டும் ரூ.3,112 கோடி நிதி பெற்றுள்ளது.
இது மொத்த நன்கொடையில் 85 சதவீதமாகும். அதிகாரத்தை பயன்படுத்தி கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு பல்வேறு சலுகைகள் வழங்கியதற்கு கைமாறாக பாஜக நன்கொடையை பெற்றிருக்கிறது.
இத்தகைய சமநிலைத் தன்மையற்ற நன்கொடை குவிப்பு காரணமாகவே பாஜக 2024 தேர்தலில் வெற்றி பெற்றது. மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் புதிய சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தமிழகம் முழுவதும் திமுக கூட்டணிக்கட்சிகள் பங்கேற்கும் கண்டன ஆர்ப்பாட்டம் நாளை நடைபெறுகிறது. சென்னை ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் மாநில தலைவர் கே.வீ.தங்கபாலு பங்கேற்கிறார். இவ்வாறு கூறப்பட்டுள்ளது.