​மாநகராட்சி சார்பில் மெரினாவில் ரூ.86 லட்சத்தில் வீடற்றோருக்கான காப்பகம்: உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்

​மாநகராட்சி சார்பில் மெரினாவில் ரூ.86 லட்சத்தில் வீடற்றோருக்கான காப்பகம்: உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
Updated on
1 min read

சென்னை: மாநக​ராட்சி சார்​பில் ரூ.86.40 லட்​சத்​தில் கட்​டப்​பட்ட வீடற்​றோருக்​கான இரவுநேர காப்​பகத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்​து​வைத்​தார்.

சென்னை மாநக​ராட்சி சார்​பில் சேப்​பாக்​கம் - திரு​வல்​லிக்​கேணி தொகு​திக்கு உட்​பட்ட மெரினா கடற்​கரை, அண்ணா பூங்கா அரு​கில் ரூ.86.40 லட்​சத்​தில் வீடற்​றோருக்​கான இரவுநேர காப்​பகம் கட்​டப்​பட்​டுள்​ளது.

இந்த காப்​பகத்தை துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் நேற்று திறந்து வைத்​து, 86 பயனாளி​களுக்கு பாய், தலை​யணை, படுக்கை விரிப்பு உள்​ளிட்ட உதவி​களை வழங்​கி​னார்.

பின்​னர் அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: சென்னை மெரினா கடற்​கரை​யில் தங்​கி, கைவினைப் பொருட்​கள், பலூன்​கள், அழகு​சாதனப் பொருட்​கள், பூக்​களை விற்று வந்த 86 ஆதர​வற்​றோர் தங்​கு​வதற்​காக மாநக​ராட்சி சார்​பில், 2,500 சதுர அடி​யில், ரூ.86.40 லட்​சத்​தில் இரவுநேரக் காப்​பகம் கட்​டப்​பட்​டு, பயன்​பாட்​டுக்கு திறக்​கப்​பட்​டுள்​ளது.

இரவு நேரம் மற்​றும் மழை, வெயி​லின்​போது அவர்​கள் தங்​கு​வதற்கு இடமில்​லாமல் இருந்த சூழலில், இந்த காப்பக வசதி பயனுள்​ள​தாக​வும், பாது​காப்​பாக​வும் இருக்​கும்.

இந்த காப்​பகத்​தில் ஆண்​கள் மற்​றும் பெண்​களுக்​கான தனித்​தனி கழிப்​பிடங்​கள், குளியலறை​கள், அவர்​களது பொருட்​களை சேமித்து வைப்​ப​தற்கு அலமாரி​கள், குடிநீர் வசதி, மின் வசதி என அனைத்து அடிப்​படை வசதி​களும் செய்​யப்​பட்​டுள்​ளன.

பாய், போர்வை உள்​ளிட்ட 15 அத்​தி​யா​வசி​யப் பொருட்​களும் வழங்​கப்​பட்​டுள்​ளன. மாநக​ராட்சி சார்​பில் வீடற்​றோர்​களுக்கு ஏற்​கெனவே 45 இடங்​களில் காப்​பகங்​கள் அமைக்​கப்​பட்​டுள்​ளன. கூடு​தலாக அமைக்​க​வும் ஆலோ​சித்து வரு​கிறோம்.

எஸ்​ஐஆர் திட்​டத்​தில் எதிர்​பார்த்​ததை​விட அதி​க​மாக தமிழகத்​தில் 97 லட்​சம் பேரும், சென்​னை​யில் 14 லட்​சம் பேரும் நீக்​கப்​பட்​டுள்​ளனர். நேற்று முன்​தினம் நடை​பெற்ற மாவட்​டச் செய​லா​ளர்​கள் கூட்​டத்​தில், நீக்​கப்​பட்ட வாக்​காளர்​கள், விடு​பட்​ட​வர்​கள், இடம்​பெயர்ந்​தவர்​கள் இவர்​களை​யெல்​லாம் எப்​படி சேர்ப்​பது என்​பது குறித்து தலை​வர் ஆலோ​சனை வழங்​கி​யிருக்​கிறார்.

வாக்​காளர் பட்​டியலில் பெயர் சேர்க்க ஜன.18-ம் தேதி வரை அவகாசம் உள்​ளது. இப்​பணி​யில் திமுக வாக்​குச்​சாவடி முகவர்​கள் ஈடு​படுத்​தப்​படு​வார்​கள். இவ்​வாறு அவர் கூறினார்.

​மாநகராட்சி சார்பில் மெரினாவில் ரூ.86 லட்சத்தில் வீடற்றோருக்கான காப்பகம்: உதயநிதி ஸ்டாலின் திறந்துவைத்தார்
காய்ச்சல், சளிக்கான 205 மருந்துகள் தரமற்றவை

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in