கனவில்தான் அமைச்சரவை பட்டியல் தயாரிக்க முடியும்: தவெக​ குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்

கனவில்தான் அமைச்சரவை பட்டியல் தயாரிக்க முடியும்: தவெக​ குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்
Updated on
1 min read

பழநி: தவெக​வினர் கனவில் வேண்​டு​மா​னால் அமைச்​சர​வைப் பட்​டியலை தயாரித்​துக் கொள்​ளலாம் என தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை விமர்​சித்​துள்​ளார்.

கொடைக்​கானலில் நேற்று அவர் செய்​தி​யாளர்​களிடம் கூறிய​தாவது: முதல்​வர் ஸ்டா​லின் மீது மக்​கள் வைத்​துள்ள நம்​பிக்​கைக்​கான தேர்​தல் இது. முதல்​வர் 5 ஆண்​டு​கள் உழைத்த உழைப்​பு, அவரின் திட்​டங்​களுக்​குப் பரி​சாக மக்​கள் தீர்ப்பு எழு​தி​யுள்​ளனர்.

கனவில் வேண்​டு​மா​னால் அமைச்​சரவை பட்​டியலை தவெக தயாரித்​துக் கொள்​ளலாம். திமுக கூட்​டணி 40 சதவீத வாக்​கு​களைக் கடந்து வெற்​றி​ பெறும். எம்​ஜிஆர், என்டிஆ

ரோடு விஜய்யை ஒப்​பிட முடி​யாது. தேர்​தலில் மதச்​சார்​பற்ற முற்​போக்​குக் கூட்​டணி கட்சி வேட்​பாளர்​களை அமலாக்​கத் துறை, வரு​மானவரித் துறை உள்​ளிட்ட மத்​திய அரசின்​கீழ் பணி​யாற்​றும் துறை​கள் தொந்​தரவு செய்​தன.

என்​னுடைய தொகு​தி​யில் நடை​பெற்ற வரு​மானவரித் துறை சோதனை குறித்து விரை​வில் அனைத்து வீடியோ ஆதா​ரங்​களும் வெளி​யிடப்​படும்.

வேட்​பாளர்​களில் எத்​தனை பேரின் வீடு​களில் சோதனை நடத்​தப்​பட்​டது என்​பதை வெள்ளை அறிக்​கை​யாக வெளி​யிட்​டால், மத்​திய அரசு யாருக்கு சாதக​மாகச் செயல்​படு​கிறது என்​பது தெரி​யும்​. இவ்​வாறு அவர் தெரிவித்தார்.

கனவில்தான் அமைச்சரவை பட்டியல் தயாரிக்க முடியும்: தவெக​ குறித்து செல்வப்பெருந்தகை விமர்சனம்
இயற்கை அழகை ரசித்தபடி கொடைக்கானலில் நடைப்பயிற்சி மேற்கொண்ட முதல்வர் - ‘செல்ஃபி’ எடுத்து மகிழ்ந்த சுற்றுலா பயணிகள்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in