“எங்களை காரணம் காட்டுவது நியாயமல்ல” - கம்யூனிஸ்டுகளுக்கு செல்வப்பெருந்தகை விளக்கம்

செல்வப்பெருந்தகை

செல்வப்பெருந்தகை

Updated on
1 min read

“​காங்​கிரஸுக்கு கூடு​தல் தொகு​தி​கள் கொடுத்​தது​போல எங்​களுக்​கும் வேண்​டும் என கம்​யூனிஸ்ட் கட்​சிகள் கேட்​பது நியா​யம் இல்​லை” என தமிழக காங்​கிரஸ் தலை​வர் செல்​வப்​பெருந்​தகை தெரி​வித்​திருக்​கி​றார்.

திமுக கூட்​ட​ணி​யில் கூடு​தல் தொகு​தி​களை கம்​யூனிஸ்ட் கட்​சிகள் எதிர்​பார்க்​கின்​றன. ஆனால் கூட்​ட​ணிக்கு புதி​தாக கட்​சிகள் வந்​திருப்​ப​தால் திமுக தர மறுக்​கிறது. இதனால் தொகுதி ஒப்​பந்​தம் இன்​னும் இறு​தி​யா​காத சூழல் நில​வு​கிறது.

இதற்​கிடை​யில் நேற்று முன்​தினம் செய்​தி​யாளர்​களிடம் பேசிய மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் மாநில செய​லா​ளர் சண்​முகம், “காங்​கிரசுக்​கும் திமுக​வுக்​கும் கூடு​தல் தொகு​தி​கள் வழங்​கப்​படும் போது இடது சாரி கட்​சிகளுக்கு கூடு​தல் தொகு​தி​கள் தரமுடி​யாது என்று சொல்​வ​தில் எந்த ஒரு நியாய​மும் இல்​லை” என்​றார்.

இதற்கு நேற்று பதிலளித்த செல்​வப்​பெருந்​தகை, “நாங்​கள் ஒரு தேசிய கட்​சி. திமுக எங்​களுக்கு 110, 63, 41, 25 என தொடர்ச்​சி​யாக தொகு​தி​களை குறைத்த​து. எனவே இந்​த​முறை 41 தொகு​தி​கள் வேண்​டும் என எங்​களது தலைமை கேட்​டது. ஆனால் அதை​யும் குறைத்​து​தான் கொடுத்​திருக்​கி​றார்​கள். தமி​ழ​கத்தை காப்​பாற்ற வேண்​டும் என்​ப​தற்​காக மூன்று தொகு​தி​கள் அதி​க​மாக கொடுத்​ததை மனநிறைவோடு வாங்​கி​யிருக்​கி​றோம்.

இப்​படி​யான சூழலில் காங்​கிரஸுக்கு கூடு​தல் தொகு​தி​கள் கொடுத்​தது​போல எங்​களுக்​கும் வேண்​டும் என கம்​யூனிஸ்ட் கட்​சிகள் கேட்​பது நியா​யம் இல்​லை.

உங்​களு​டைய உரிமையை கேளுங்​கள். முதல்​வ​ருக்கு மனம் இருக்​கிறது; இருந்​தால் கொடுப்​பார். எங்​களு​டைய வேதனையை தோழமை கட்​சிகள் புரிந்​து​கொள்ள வேண்​டும்” என்​றார்​.

<div class="paragraphs"><p>செல்வப்பெருந்தகை </p></div>
திமுகவில் செயல்படும் அதிமுக: தம்பிதுரை ‘கல கல’

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in