“முருகனும், சிவனும் இந்து கடவுளா?” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமான் கேள்வி

“முருகனும், சிவனும் இந்து கடவுளா?” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமான் கேள்வி
Updated on
1 min read

சென்னை: “முருகன், சிவன், மாயவன் இந்து கடவுளா?. இது பற்றி என்னோடு யாராவது தர்க்கம் செய்ய முடியுமா?” என்று என நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் கேள்வி எழுப்பியுள்ளார்.

இது குறித்து அவர் செய்தியாளர்களிடம் பேசும்போது, “திருப்பரங்குன்றம் விவகாரத்தை பிரச்சினையாக்க முயற்சிக்கின்றனர். இத்தனை ஆண்டுகளாக இல்லாத பிரச்சினையை இப்போது கையில் எடுப்பது ஏன்? திருப்பரங்குன்றம் பிரச்சினைக்கு பாஜக, திமுக அரசுதான் காரணம்.

தமிழகத்துக்கு ரூ.10 லட்சம் கோடி கடன் இருக்கிறது. இந்த ஆட்சி நிறைவேற்றிய நல்ல திட்டங்களை கூற முடியுமா? தேர்தல் வரும் போதுதான் கட்சிகளுக்கு மக்களின் மீது பாசம் வருகிறது. அமைச்சர்கள் பொன்முடி, துரைமுருகன் வீடுகளில் அமலாக்கத் துறை சோதனை செய்தார்கள். ஆனால் இதுவரை நடவடிக்கை எடுக்கப்பட்டதா?

முருகன், சிவன், மாயவன் ஆகியோர் இந்து கடவுளா? என்னோடு யாராவது தர்க்கம் செய்ய முடியுமா? தேர்தல் சமயத்தில் திடீர் பாசம் காட்டுகிறார்கள். மதம் மனிதனுக்கானதா அல்லது மனிதனுக்காக மதமா?. மதத்தைப் போற்றுகிறீர்கள் ஆனால் இங்கே மனிதனைப் போற்றுகிறீர்களா? ஒரு குறிப்பிட்ட மதம் சார்ந்த மக்கள் வாழுகின்ற நாடாக மாற்றுகிறீர்கள்.

ஆனால் நாங்கள் மனிதர்கள் வாழும் நாடாக உருவாக்க நினைக்கிறோம். திமுக அரசுக்கு எதிராக நாள்தோறும் போராட்டங்கள் நடந்து வருகிறது. ஓட்டுக்கு காசு கொடுக்காமல், போட்டியிடும் துணிச்சல் திமுக, அதிமுகவுக்கு உள்ளதா?” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

“முருகனும், சிவனும் இந்து கடவுளா?” - திருப்பரங்குன்றம் விவகாரத்தில் சீமான் கேள்வி
16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in