16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!

16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
Updated on
1 min read

சென்னை: “ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவு இல்லாமல் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16% பெற்று தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலமாக தமிழகம் உள்ளது” என முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். ஜிஎஸ்டிபி என்பது ஒரு மாநிலத்தின் ஒட்டுமொத்த வளர்ச்சி விகிதத்தைக் குறிப்பதாகும்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பகக்த்தில், “வானுயர் ஜிஎஸ்டிபி (GSDP) வளர்ச்சி விகிதத்தில் பெருமாநிலங்களை எல்லாம் பின்னுக்குத் தள்ளி தமிழ்நாடு சாதனை படைத்துள்ளது.

பரப்பளவில் பெரிய மாநிலம் இல்லை, மக்கள் தொகையிலும் பெரிய மாநிலம் இல்லை, ஒன்றிய அரசின் ஆதரவு பெருமளவில் இல்லை, இருந்தும் ஜிஎஸ்டிபி வளர்ச்சியில் 16%-உடன் தமிழ்நாடு நம்பர் ஒன் என்றால் அதுதான் திராவிட மாடல். கடந்த மூன்றாண்டுகளில் நிலையான, அதேவேளையில் மிக அதிகமான வளர்ச்சியைக் கண்டுள்ளது தமிழ்நாடுதான். சொல்வது நாம் அல்ல, இந்திய ரிசர்வ் வங்கி.

2021-2025 வரையிலான நிதியாண்டுகளில் மட்டுமே 10.5 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு உயர்ந்திருக்கிறது தமிழ்நாட்டின் பொருளாதாரம். மொத்த மதிப்பு ரூ. 31.19 லட்சம் கோடி. நம்மோடு ஒப்பிடத்தக்க, வளர்ந்த பெரிய மாநிலங்களான, மகாராஷ்ட்டிரா, கர்நாடகம், குஜராத் போன்றவற்றை விஞ்சிய இந்த வளர்ச்சி விகிதம் – தமிழ்நாட்டுக்கே சொந்தம்.

தனிநபர் வருமான உயர்விலும் தொடர்கிறது தமிழ்நாட்டின் வெற்றி. 2031-ஆம் ஆண்டு திராவிட மாடல் 2.0 நிறைவுறும்போது, இந்தியாவில் தமிழ்நாடு முதலிடத்தில் இல்லாத துறையே இல்லை என்ற நிலையை உருவாக்கிக் காட்டுவேன், இது உறுதி!” இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

16% ஜிஎஸ்டிபி வளர்ச்சியுடன் தமிழகம் முதலிடம்: முதல்வர் ஸ்டாலின் பெருமிதம்!
ட்ரம்ப்பின் ‘கோல்டு கார்டு’ விசா திட்டத்துக்கு எதிர்ப்பு: அமெரிக்காவின் 20 மாகாணங்கள் வழக்கு!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in