சென்னையில் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: ஆசிரியர்​களுக்கு தேர்​தல் பயிற்சி வகுப்பு நடை​பெறு​வ​தால் சென்னை மாவட்​டத்​தில் உள்ள பள்​ளி​களுக்கு இன்று (ஏப்​ரல் 15) விடுமுறை அறிவிக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழகத்​தில் மாநில பாடத்​திட்​டத்​தில் 1 முதல் 9-ம் வகுப்பு வரை​ பயிலும் மாணவர்​களுக்கு ஆண்டு இறு​தித்​தேர்வு தற்​போது நடை​பெற்று வரு​கிறது.

இதற்​கிடையே சென்னை மாவட்​டத்​தில் உள்ள ஆசிரியர்​களுக்கு தேர்​தல் பயிற்சி வகுப்பு இன்று (ஏப்​ரல் 15) நடை​பெறவுள்​ளது.

இந்த பயிற்சி வகுப்​பில் பெரும்​பாலான ஆசிரியர்களும், ஆசிரியரல்​லாத பணியாளர்​களும் பங்​கேற்​க​வுள்​ளனர். இதையொட்டி மாவட்​டத்​தில் உள்ள பள்​ளி​களுக்கு இன்று விடு​முறை அளிக்​கப்​பட்​டுள்​ளது.

தேர்​தல் பணி வழங்​கப்​பட்​டுள்ள ஆசிரியர்​கள், பணி​யாளர்​கள் பயிற்சி வகுப்​பு​களுக்குச் செல்ல வேண்​டும் என்​று சென்னை மாவட்ட முதன்​மைக் கல்வி அலு​வலர் கபீர் கூறி​யுள்​ளார்.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
உள் மாவட்டங்களில் 3 டிகிரி செல்சியஸ் வெப்பம் உயர வாய்ப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in