தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்

தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
Updated on
2 min read

புதுடெல்லி: தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு குதிரை பேர முறை​கேடு புகார்​கள் மீது சிபிஐ விசா​ரணை கோரிய ரிட் மனுவை விசா​ரணைக்கு ஏற்க உச்ச நீதி​மன்​றம் மறுத்​து​விட்​டது.

மதுரையை சேர்ந்த கே.கே.ரமேஷ் சார்​பில் உச்ச நீதி​மன்​றத்​தில் தாக்​கல் செய்​யப்​பட்ட ரிட் மனு​வில் கூறியிருந்ததாவது: தமிழ்​நாடு சட்​டப்​பேர​வை​யில் கடந்த 13-ம் தேதி நடத்​தப்​பட்ட தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு வெற்றி பெற செய்​யும் வகை​யில் ஆதர​வளித்த கட்​சிகளுக்கு சுமார் 1000 கோடி ரூபாய் அளவுக்கு தொகை​யும், 1000 கோடி ரூபாய் அளவுக்கு அரசு ஒப்​பந்​தங்​களுக்​கான உறு​தி​யும் அளிக்​கப்​பட்​டுள்​ள​தாக​வும், நம்​பிக்கை வாக்​கெடுப்பு ஜனநாயக முறை​யில் நடை​பெற​வில்லை என்​றும் புகார்​கள் எழுந்​துள்ளன. மேலும் அமு​முக எம்​எல்ஏ காம​ராஜும், எஸ்.பி. வேலுமணி தலை​மையி​லான பிரி​வினர் தவெக​வுக்கு ஆதர​வாக வாக்​களித்​தனர்.

இது​போன்ற குதிரைபேர புகார்​கள் குறித்து சிபிஐ விசா​ரணைக்கு உத்​தர​விட வேண்​டும். தவெக அரசு மீதான நம்​பிக்கை வாக்​கெடுப்பு முறை​கேடு புகார்​களை சிபிஐ விசா​ரித்து முடிக்​கும் வரை குடியரசுத் தலை​வர் ஆட்​சியை நடை​முறைப்​படுத்​த​வும் உத்​தர​விட வேண்​டும். இவ்வாறு அதில் கூறப்பட்டு இருந்தது.

இந்த ரிட் மனுவை உச்​சநீ​தி​மன்ற தலைமை நீதிபதி சூர்ய காந்த், நீதிபதி வி. மோகனா அடங்​கிய அமர்வு நேற்று விசா​ரித்​தது. மனு​தா​ரர் சார்​பில் வழக்​கறிஞர் சி.ஆர். ஜெய்​சுகின் ஆஜராகி, “ஒவ்​வொரு மாநிலத்​தி​லும், மத்​தி​யிலும் கூட ஆளும் கட்சி குதிரை பேரத்​தில் ஈடு​படு​கிறது. கிழக்கு இந்​தி​யா​விலும், மத்​திய இந்​தி​யா​விலும் இது​போன்ற குதிரை பேரம் நடை​பெறுகிறது.

வசதியை செய்து தருவது யார்? - எம்​எல்​ஏக்​கள் தனி விமானத்​தில் செல்​கின்​றனர். அவர்​களுக்கு யார் இந்த வசதியை செய்து தரு​வது? தமிழ்​நாடு சட்​டப்​பேரவை தலை​வர் ஊடகங்​களை​யும் எம்​எல்​ஏக்​களை​யும் அழைத்து தீர்​மான கடிதத்தை வழங்​கியதுடன், அதி​முக எம்​எல்​ஏக்​களின் ராஜி​னாமா கடிதத்தை ஏற்​றுக் கொண்​ட​தாக​வும் அறி​வித்​தார். ஏற்​றுக்​கொண்ட சில நிமிடங்​களி​லேயே மற்​றொரு கட்​சி​யில் அவர்​கள் இணை​கிறார்​கள். இது தெளி​வான குதிரை பேரம். நமது நாட்​டில் ஆளுங் கட்​சிகள் இரு​வகை​யில் ஜனநாயக மாண்​பு​களை சீரழிக்​கின்​றன.

இது போன்ற குதிரை பேர விவ​காரத்​தில் ஜனநாயகத்தை காக்​கும் நோக்​கில் நீதி​மன்​றம் தலை​யிட வேண்​டும்​”என்று வாதிட்​டார். “மனு​தா​ரர் தாக்​கல் செய்​துள்ள பொதுநல மனுவை தள்​ளு​படி செய்​தால் ஏமாற்​றத்​துக்​கும் உள்​ளாக மாட்​டார். ஏராள​மான பொதுநல மனுக்​களை தாக்​கல் செய்​வதை வழக்​க​மாகக் கொண்​டுள்​ளார்” என்று தலைமை நீதிபதி குறிப்​பிட்ட போது, “இது ரிட் மனு” என மனுதா​ரர் தரப்​பில் தெரிவிக்​கப்​பட்​டது.

வாதத்தை பதிவு செய்து கொண்ட உச்​சநீ​தி​மன்​றம், வாதங்​களை விரி​வாக கேட்​டோம். தெளி​வில்​லாத, வெறுமனே சுமத்​தப்​பட்​டுள்ள கடும் குற்​றச்​சாட்​டு​களுக்கு எவ்​வித ஆதா​ர​மும் இல்​லாத​தால், இந்த விவ​காரத்​தில் தலை​யிட வேண்​டிய மு​காந்​திரம்​ எழவில்​லை என்​று குறிப்​பிட்​டு ரிட்​ மனுவை தள்​ளு​படி செய்​து உத்​தரவிட்​டது.

தவெக அரசுக்கு எதிரான குதிரை பேர புகார்: சிபிஐ விசாரணை கோரிய மனுவை நிராகரித்தது உச்ச நீதிமன்றம்
“வெள்ளை அறிக்கையை காரணம் காட்டி தவெக அரசு செயல்படாமல் இருக்கக் கூடாது” - அண்ணாமலை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in