நவோதயா பள்ளிகளுக்கான இடங்களை 3 மாதங்களுக்குள் அடையாளம் காண வேண்டும்: தமிழக அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவு

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
2 min read

புதுடெல்லி: நவோதயா பள்​ளி​களை நிறு​வுவதற்​கான இடங்​களை 3 மாதங்​களுக்​குள் தமிழக அரசு அடை​யாளம் காண உத்​தர​விட்ட உச்ச நீதி​மன்​றம், மாநிலத்​தில் அரசு மாறி​யுள்​ள​தால் மனநிலை​யிலும் மாற்​றத்தை எதிர்​பார்ப்​ப​தாக தெரி​வித்​துள்​ளது.

தமி​ழ​கத்​தில் ஜவகர் நவோதயா வித்​யாலயா பள்​ளியை நிறுவ வேண்​டும் என்ற உத்​தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்​முறை​யீட்டு மனு உச்ச நீதி​மன்​றத்​தில் நீதிப​தி​கள் பி.​வி.​நாகரத்​னா, அகஸ்​டின் ஜார்ஜ் மாசிஹ் ஆகி​யோர் அடங்​கிய அமர்​வில் மீண்​டும் விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது நடந்த வாதம்:

நீதிப​தி​கள்: நவோதயா பள்​ளி​களுக்​கான இடத்தை அடை​யாளம் காண பிறப்​பித்த உத்​தரவை ஏன் செயல்​படுத்​த​வில்​லை? நவோதயா பள்​ளி​களை தமி​ழ​கத்​தில் அமைப்​ப​தில் இருக்​கும் சிக்​கல் என்ன? எதற்​காக அதை எதிர்க்​கிறீர்​கள்?

தமிழக அரசு தரப்பு மூத்த வழக்​கறிஞர் ஜெய்​தீப் குப்​தா: எந்த மாநிலத்​தில் போதிய பள்ளி கட்​டமைப்​பு​கள் இல்​லையோ அந்த மாநிலத்​தில் நவோதயா பள்​ளி​களை நிறு​வலாம், தமி​ழ​கத்​தில் பள்ளி கட்​டமைப்​பு​கள் மிக​வும் சிறப்​பாக உள்​ளன. கிரா​மப்​புற மாண​வர்​களுக்​கும் சிறந்த கல்​வி வழங்​கப்​படு​கிறது ஏற்​கெனவே சிறந்த கட்​டமைப்பை கொண்ட தமி​ழ​கத்​துக்கு நவோதயா பள்​ளி​கள் தேவை​யில்லை என்​பதே அரசின் நிலைப்​பாடு. மேலும் நவோதயா பள்​ளி​கள் மும்​மொழி கொள்​கையை பின்​பற்​று​பவை என்​ப​தால், அது தமி​ழ​கத்​தின் இரு மொழி கொள்​கைக்கு முரணானது. கல்வி பொதுப்​பட்​டியலில் உள்​ள​தால் அதில் மாற்​றம் கொண்டு வர அழுத்​தம் கொடுக்க முடி​யாது.

நீதிப​தி​கள்: இது மாநிலம் தனி வழி​யில்​தான் பயணிக்​கும் என்று கூறு​வ​தாக உள்​ளது, மொழி​தான் பிரச்​சினை என்​றால் இந்​திக்கு பதிலாக வேறு ஒரு மொழியை பயிற்​று​விக்​கலாமே, நவோதயா பள்​ளி​கள் விவ​காரத்​தில் தமிழக அரசு தனது மனநிலையை மாற்​றிக் கொள்ள வேண்​டும்.

தமிழக அரசு தரப்பு வழக்​கறிஞர்: இந்​தியா கூட்​டாட்சி தத்​து​வத்​தில் இயங்​கக்​கூடிய நாடு, எனவே ஒரு விஷ​யத்தை எங்​கள் மீது திணிக்க வேண்​டும் என்ற நோக்​கில் செயல்​படக் கூடாது.

மத்​திய அரசின் கூடு​தல் சொலிசிட்​டர் ஜெனரல் நட்​ராஜ்: மொழிக் கொள்​கையை பொறுத்​தவரை அமர்ந்து பேசி​னாலே தீர்வு காண முடி​யும், இந்தி அல்​லது வேறு மொழியைக்​கூட மூன்​றாவது மொழி​யாக எடுத்​துக் கொள்​ளலாம் என்​பது​தான் புதிய கல்விக் கொள்​கை​யின் சாராம்​சம்.

தமிழக அரசு தரப்பு வழக்​கறிஞர்: மத்​திய அரசு மும்​மொழிக் கொள்​கையை தீவிர​மாக பற்றி கொண்​டுள்​ளது, இந்​தியை திணிப்​பது தான் அவர்​களு​டைய நோக்​க​மாக இருக்​கிறது. மும்​மொழிக் கொள்​கையை ஏற்​காத​தால் தமி​ழ​கத்​துக்கு வழங்க வேண்​டிய ரூ.5,000 கோடிக்கு மேலான கல்வி நிதியை மத்​திய அரசு இது​வரை விடுவிக்​காமல் அழுத்​தம் கொடுத்து வரு​கிறது.இவ்​வாறு வாதம் நடந்​தது.

இதைத் தொடர்ந்து நீதிப​தி​கள் கூறிய​தாவது: தமி​ழ​கத்​தில் புதிய அரசு மாறி​யுள்​ளது, அதனால் அதன் மனநிலை​யிலும் சில மாற்​றத்தை எதிர்​பார்க்​கி​றோம், எனவே, நவோதயா பள்​ளி​கள் அமைப்​ப​தற்​கான நிலத்தை முதலில் அடை​யாளம் காணுங்​கள் பிற பிரச்​சினை​களை நாம் ஒவ்​வொன்​றாக பேசித் தீர்த்​துக் கொள்​ளலாம். தமிழக அரசு கல்விக்கு எவ்​வளவு முக்​கி​யத்​து​வம் கொடுக்​கிறது, எவ்​வளவு செலவு செய்​கிறது என்​பது தெரி​யும். அதற்​காக மிகப்​பெரும் பாராட்​டுக்​களை தெரி​வித்​துக் கொள்​கி​றோம்.

மத்​திய அரசின் கொள்கையை ஏற்​றுக்​கொள்​வ​தால் அவர்​களிடம் சரணடைந்து விட்​டோம் என்று அர்த்​தம் கிடை​யாது, தமி​ழ​கத்​தில் நவோதயா பள்​ளி​களை நிறு​வுவதற்​காக நிலங்​களை அடை​யாளம் காண ஏற்​கெனவே பிறப்​பிக்​கப்​பட்ட உத்​தரவை மாநில அரசு செயல்​படுத்த வேண்​டும், இதற்​காக 3 மாத கால அவகாசம் வழங்​கு​கி​றோம்.

மேலும், நவோதயா பள்​ளி​களை நிறு​வுவ​தில் உள்ள முரண்​பாடு​களை களைய, மத்​திய அரசு மற்​றும் தமிழக அரசின் உயர்​மட்ட அதி​காரி​கள் இணைந்து பேச்​சு​வார்த்தை நடத்தி முடி​வெடுக்க வேண்​டும். மாநில அரசின் கொள்​கை​யின் அடிப்​படை​யிலும், கூட்​டாட்சி தத்​து​வத்​துக்கு மதிப்​பளித்​தும் இந்த பேச்​சு ​வார்த்தை அமைய வேண்​டும்.

இந்த பேச்​சு​வார்த்​தை​யின்​போது நிறுத்தி வைக்​கப்​பட்​டுள்ள தமி​ழ​கத்​தின் கல்வி நிதி ரூ.5,000 கோடி குறித்​தும் விவா​தித்து தீர்வு காண வேண்​டும். இவ்​​வாறு உத்​தர​விட்ட நீதிப​தி​கள், விசா​ரணையை டிசம்​பர் 14-ம் தேதிக்கு தள்​ளிவைத்​தனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
பெரியாரின் 148-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in