பெரியாரின் 148-வது பிறந்தநாள்: முதல்வர் விஜய், ஸ்டாலின், தலைவர்கள் மரியாதை

தலைமைச் செயலகத்தில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்பு
பெரியாரின் 148-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது படத்துக்கு முதல்வர் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார். | சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

பெரியாரின் 148-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது படத்துக்கு முதல்வர் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார். | சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது.

Updated on
1 min read

சென்னை: பெரி​யார் பிறந்​த​நாளை​யொட்​டி, அவரது படத்​துக்கு முதல்​வர் விஜய், திமுக தலை​வர் ஸ்டா​லின் உள்​ளிட்ட தலை​வர்​கள் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர். தலை​மைச் செயல​கத்​தில் முதல்​வர் தலை​மை​யில் சமூகநீதி நாள் உறு​தி​மொழி ஏற்​கப்​பட்​டது.

பெரி​யாரின் 148-வது பிறந்​த​ நாள் நேற்று கொண்​டாடப்​பட்​டது. இதையொட்​டி, சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நடந்த நிகழ்​வில் பெரி​யார் படத்​துக்கு முதல்​வர் விஜய், மலர்​தூவி மரி​யாதை செலுத்​தி​னார். பின்​னர் முதல்​வர் தலை​மை​யில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் ஜேசிடி பிர​பாகர், அமைச்​சர்​கள், தலை​மைச் செயலர் சாய்​கு​மார், அரசு துறைச் செயலர்​கள், காவல் துறை மற்​றும் அரசு அலு​வலர்​கள், பணி​யாளர்​கள் சமூகநீதி நாள் உறு​தி​மொழி ஏற்​றுக்​கொண்​டனர்.

சென்னை அண்ணா சாலை​யில் உள்ள பெரி​யார் சிலைக்கு அரசு சார்​பில் சட்​டப்​பேர​வைத் தலை​வர் பிர​பாகர், அமைச்​சர்​கள் ஆனந்த், ஆதவ் அர்​ஜு​னா, வெங்​கடரமணன், ராஜ்மோகன், வன்னி அரசு, மரிய வில்​சன், குமார் ஆகியோர் மலர்​தூவி மரி​யாதை செலுத்​தினர். தொடர்ந்​து, திமுக தலை​வர் ஸ்டா​லின், பொதுச் செய​லா​ளர் துரை​முரு​கன், பொருளாளர் டி.ஆர்​.​பாலு, இளைஞர் அணிச் செய​லா​ளர் உதயநிதி ஸ்டா​லின் ஆகியோர் மரி​யாதை செலுத்​தினர்.

அதி​முக சார்​பில் அவைத் தலை​வர் தமிழ்​மகன் உசேன், முன்​னாள் அமைச்​சர்​கள் பொன்​னையன், ஜெயக்​கு​மார் உள்​ளிட்​டோர் மரி​யாதை செலுத்​தினர். திரா​விடர் கழகம், மதி​முக, இந்​திய கம்​யூனிஸ்ட், மார்க்​சிஸ்ட் கம்​யூனிஸ்ட் கட்​சி​யினரும் மரி​யாதை செலுத்​தினர்.

தலை​வர்​கள் புகழாரம்: அரசி​யல் தலை​வர்​கள் வெளி​யிட்ட வாழ்த்​துச் செய்​தி​யில் கூறி​யுள்​ள​தாவது:

முதல்​வர் விஜய்: சுயமரி​யாதை, சமூகநீ​தி, பகுத்​தறிவு நிறைந்த முற்​போக்​குச் சிந்​தனை​களை மக்​கள் மனதில் விதைத்​து, சாதி, மத வேறு​பாடு​களைக் களை​ய​வும், மக்​களின் உரிமை​களை மீட்​க​வும் வாழ்​நாள் முழு​வதும் போராடிய பெரி​யாரின் பிறந்​த​நாளில், அவரது புரட்​சிகர​மான சிந்​தனை​கள், கொள்​கைகளை நினை​வு​கூர்ந்து வணங்​கு​கிறேன்.

திமுக தலை​வர் ஸ்டா​லின்: வெளிச்​சமற்ற இடம் இருள். கேள்வி​களற்ற சமூகம் அதை​விட பேரிருள். ஏன்? எதற்​கு? எப்​படி? என்ற கேள்வி​கள் இருக்​கும் வரை, இருள் நம்மை அண்​டாது. பெரி​யார் ஏற்​றிய பகுத்​தறி​வுச் சுடர் தலை​முறை​கள் கடந்து ஒளிரட்​டும்.

அதி​முக பொதுச் செய​லா​ளர் பழனி​சாமி: பிறப்​பால் உயர்வு - தாழ்வு இல்​லை; மனிதன் மனித​னாக மதிக்​கப்பட வேண்​டும் என்ற சமூகநீ​திப் பாதையை தமிழகத்​தின் அரசி​யல் மற்​றும் சமூக வாழ்​வில் ஆழமாகப் பதித்த பெரி​யாரின் வழி​யில் என்​றும் நடக்க உறு​தி​யேற்​போம். இவ்​வாறு அவர்​கள் தெரி​வித்​துள்​ளனர்.

தமிழக காங்​கிரஸ் தலை​வர் மாணிக்​கம் தாகூர், பாமக தலை​வர் அன்​புமணி, அமமுக பொதுச் செய​லா​ளர் டிடிவி தினகரன், ‘வீ த லீடர்ஸ்’ அமைப்​பின் தலை​வர் அண்​ணா​மலை உள்​ளிட்​டோரும்​ வாழ்த்​து தெரி​வித்​துள்​ளனர்​.

<div class="paragraphs"><p>பெரியாரின் 148-வது பிறந்தநாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதையொட்டி, சென்னை தலைமைச் செயலகத்தில் அவரது படத்துக்கு முதல்வர் விஜய், மலர்தூவி மரியாதை செலுத்தினார். |&nbsp;சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் ஸ்டாலின் தலைமையில் சமூகநீதி நாள் உறுதிமொழி ஏற்கப்பட்டது. </p></div>
எரிபொருள் தட்டுப்பாடு: பாகிஸ்தானில் கடும் கட்டுப்பாடுகள் அமல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in