போலீஸார் மீது கல்வீசி தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்

போலீஸார் மீது கல்வீசி தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
Updated on
2 min read

சென்னை: ஆந்​தி​ரா​வில் கைது செய்து அழைத்து வந்​த​போது போலீ​ஸார் மீது கல்​வீசி தாக்கி கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக பதிவு செய்​யப்​பட்ட வழக்​கில் பிரபல யூடியூப​ரான சவுக்கு சங்​கருக்கு ஜாமீன் வழங்கி உயர் நீதி​மன்​றம் உத்​தர​விட்​டுள்​ளது.

மிரட்டி பணம் பறித்​தல் மற்​றும் பணமோசடி ஆகிய குற்​றச்​சாட்​டு​களின் கீழ், ஆதம்​பாக்​கம் மற்​றும் சைதாப்​பேட்டை போலீ​ஸார் சவுக்கு மீடியா சிஇஓ-​வான யூடியூபர் சவுக்கு சங்​கரை கடந்​தாண்டு டிச.13 அன்று கைது செய்​தனர்.

அந்த வழக்​கில் மருத்​துவ காரணங்​களுக்​காக அவருக்கு மார்ச் 25 வரை உயர் நீதி​மன்​றம் இடைக்​கால ஜாமீன் வழங்​கி​யிருந்​தது. ஆனால் அந்​தக் காலக்​கெடு தாண்​டி​யும் அவர் சம்​பந்​தப்​பட்ட கீழமை நீதி​மன்​றத்​தில் சரண் அடைய​வில்​லை.

இந்​நிலை​யில், ஆந்​திர மாநிலம், ஓங்​கோலில் தலைமறை​வாகி​யிருந்த சவுக்கு சங்​கரை போலீ​ஸார் கைது செய்து புழல் சிறைக்கு கொண்டு வந்​தனர். அப்​போது, வரும் வழி​யில் சிறுநீர் கழிப்​ப​தற்​காக போலீஸ் வாக​னம் சாலை​யோரத்​தில் நிறுத்​தப்​பட்​டது.

மற்​றொரு வாக​னத்​தில் வந்த சிலர் போலீ​ஸாருடன் வாக்கு வாதத்​தில் ஈடு​பட்​டு, ஆபாச வார்த்​தைகளால் திட்​டி, போலீஸ் வாக​னம் மீது கல்​வீசி தாக்​குதலில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்​டது.

இதையடுத்​து, போலீ​ஸார் மீது கல்​வீசி கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக சவுக்கு சங்​கர் மீதும், அவருக்கு ஆதர​வாக மற்​றொரு வாக​னத்​தில் வந்​தவர்​கள் மீதும் கொலை முயற்சி வழக்கு பதி​யப்​பட்​டது.

அந்த வழக்​கில் தனக்கு ஜாமீன் கோரி சவுக்கு சங்​கர் சென்னை உயர் நீதி​மன்​றத்​தில் மனுத் தாக்​கல் செய்​திருந்தார். அதில், ``அரசி​யல் அழுத்​தம் காரண​மாக போலீ​ஸார் தன் மீதுள்ள காழ்ப்​புணர்ச்​சி​யால் உள்​நோக்​கத்​துடன் இந்த பொய் வழக்கை பதிவு செய்​துள்​ளனர்.

போலீ​ஸாரை கல்​வீசி தாக்கி கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக எனக்கு எதி​ராக பொய்​யான கதை புனையப்​பட்​டுள்​ளது. அப்​படி ஒரு சம்​பவமே நடை​பெற​வில்லை'' எனக் கூறி​யிருந்​தார்.

இந்த மனு நீதிபதி எல்.விக்​டோரியா கவுரி முன்​பாக விசா​ரணைக்கு வந்​தது. அப்​போது, மனு​தா​ரர் தரப்​பில் ஆஜரான வழக்​கறிஞர் அருண் அன்​புமணி, ``போலீ​ஸார் சவுக்கு சங்​கர் மீது வழக்கு மேல் வழக்கு என பல்​வேறு வழக்​கு​களை பதிவு செய்​துள்​ளனர்'' என்​றார்.

அதற்கு ஆட்​சேபம் தெரி​வித்து அரசு தரப்​பில் ஆஜரான கூடு​தல் குற்​ற​வியல் வழக்​கறிஞர் ஆ. தாமோதரன், ``உயர் நீதி​மன்​றம் அளித்த இடைக்​கால ஜாமீன் முடிவடைந்த பின்​னரும் அவர் நீதி​மன்​றத்​தில் சரணடை​யாமல் தலைமறை​வா​னார்.

சவுக்கு சங்​கர் மீது 48 வழக்​கு​கள் நிலு​வை​யில் உள்​ளன. உயர் நீதி​மன்ற உத்​தர​வுப்​படியே ஆந்​திரா ஓங்​கோலில் தலைமறை​வாக இருந்த அவரை தனிப்​படை போலீ​ஸார் கைது செய்​தனர்.

சிறை​யில் அடைக்க கொண்டு வந்​த​போது போலீ​ஸாரின் வாக​னம் மீது கல்​வீச்​சில் ஈடு​பட்டு அவரை மீட்க முற்​பட்​டனர். அதன் காரண​மாகவே, கொலை முயற்சி வழக்குப் பதி​யப்​பட்​டுள்​ளது'' என வாதிட்டார்.

இருதரப்பு வாதங்​களை​யும் கேட்ட நீதிப​தி, ``கொலை முயற்​சி​யில் ஈடு​பட்​ட​தாக குற்​றம் சாட்​டப்​பட்ட சவுக்கு சங்​கர் தின​மும் புழல் காவல் நிலை​யத்​தில் ஆஜராகி கையெழுத்​திட வேண்​டும், விசா​ரணைக்கு ஒத்​துழைக்க வேண்​டும்'' என்ற நிபந்​தனை​யுடன் ஜாமீன் வழங்கி உத்​தர​விட்​டார்.

போலீஸார் மீது கல்வீசி தாக்கியதாக பதியப்பட்ட வழக்கில் சவுக்கு சங்கருக்கு ஜாமீன்
தவெக அமைச்சரவையில் சேர காங்கிரசுக்கு அழைப்பு: மேலிடப் பொறுப்பாளர் கிரிஷ் சோடங்கர் தகவல்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in