வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை: ஜனவரி இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்

வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை: ஜனவரி இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்
Updated on
1 min read

நாகப்பட்டினம்: சுற்​றுலாப் பயணி​களைக் கவரும் வகை​யில் வேளாங்​கண்​ணி​யில் இம்​மாத இறு​தி​யில் ஹெலிகாப்டர் சேவை தொடங்​கப்பட உள்​ளது. நாகை மாவட்​டத்​தில் சுற்​றுலாத் துறையை மேம்​படுத்த மாவட்ட நிர்​வாகம் பல்​வேறு நடவடிக்​கைகளை மேற்​கொண்டு வரு​கிறது.

அதன் ஒரு பகு​தி​யாக, சுற்​றுலாப் பயணி​களை கவரும் வகை​யில் வேளாங்​கண்​ணி​யில் ஹெலிகாப்டர் சேவை தொடங்​கப்பட உள்​ளது. டெல்​லியை சேர்ந்த ஜெயம் ஏவி​யேஷன் என்ற நிறு​வனத்​துடன் இதற்​கான ஒப்​பந்​தம் போடப்​பட்​டுள்​ளது.

இதற்​காக வேளாங்​கண்ணி பேரால​யத்​துக்​குச் சொந்​த​மான இடத்​தில் 10 ஆயிரம் சதுர அடி​யில் ஹெலிபேட் அமைக்​கும் பணி​கள் நடை​பெற்று வரு​கின்​றன. வேளாங்​கண்​ணி​யைச் சுற்றி 25 கி.மீ வான் பரப்​பள​வில் ஹெலி​காப்​டரில் சுற்​றிப் பார்க்​கும் வகை​யில் ஏற்​பாடு​கள் செய்​யப்​பட்டு வரு​கின்​றன.

இந்த ஹெலி​காப்​டரில் 6 பேர் வரை பயணிக்க முடியும். வேளாங் கண்ணி பகு​தியை சுற்​றிப் பார்க்க 10 நிமிடத்​துக்கு ஒரு நபருக்கு சுமார் ரூ.6,000 கட்​ட​ணம் நிர்​ண​யிக்க உத்தேசிக்​கப்​பட்​டுள்​ளது.

45 நிமிடங்களில்... உட்​கட்​டமைப்பு தயா​ரானதும், சென்​னை, மதுரை, திருச்சி மற்​றும் பெங்​களூரு போன்ற நகரங்​களில் இருந்​தும் நேரடி சேவை வழங்​கத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது.

திருச்​சி​யில் இருந்து வேளாங்​கண்​ணிக்கு சாலை மார்க்​க​மாக செல்ல 3 மணி நேரத்​துக்கு மேல் ஆகும் நிலை​யில், ஹெலிகாப்டர் மூலம் 45 நிமிடங்​களில் சென்​றடைய​லாம்.

மாவட்ட நிர்​வாகத்​தின் இந்த முயற்​சி, வேளாங்​கண்​ணிக்கு வரும் வெளி​நாடு வாழ் இந்​தி​யர்​கள் மற்​றும் சுற்​றுலாப் பயணி​களுக்கு மிக​வும் உதவி​யாக இருக்​கும் என்று எதிர்​பார்க்​கப்​படு​கிறது.

இது சுற்​றுலாப் பயன்​பாட்​டுக்கு மட்​டுமல்​லாமல், பேரிடர் மேலாண்மை மற்​றும் மருத்​துவ அவசரக் காலங்​களுக்​கும் பயன்​படும் வகை​யில் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. இம்​மாத இறு​தி​யில் அல்​லது அடுத்த மாத தொடக்​கத்​தில் ஹெலிகாப்டர் சுற்​றுலா தொடங்க வாய்ப்​பு உள்ள​தாகத் தெரி​கிறது.

வேளாங்கண்ணியில் ஹெலிகாப்டர் சேவை: ஜனவரி இறுதியில் பயன்பாட்டுக்கு கொண்டுவர திட்டம்
443 நாட்களுக்கு பிறகு மேட்டூர் நீர்மட்டம் 100 அடிக்கு கீழ் சரிவு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in