சர்வம் நிறுவனம் சார்பில் ரூ.10,000 கோடியில் ஏஐ தகவல் மையம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்

சர்வம் நிறுவனம் சார்பில் ரூ.10,000 கோடியில் ஏஐ தகவல் மையம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
Updated on
2 min read

சென்னை: தமிழகத்​தில் சர்​வம் ஏஐ நிறு​வனம் சார்​பில் ரூ.10,000 கோடி​யில் செயற்கை நுண்​ணறிவு தகவல் மையம் அமைப்​ப​தற்​கான ஒப்​பந்​தம் முதல்​வர் முன்​னிலை​யில் நேற்று கையெழுத்​தானது.

சென்னை தலை​மைச் செயல​கத்​தில் நடை​பெற்ற நிகழ்ச்​சி​யில், சர்​வம் ஏஐ நிறு​வனம் சார்​பில் தமிழகத்​தில் ரூ.10,000 கோடி​யில் 1,000 பேருக்கு வேலை​யளிக்​கும் செயற்கை நுண்​ணறிவு தகவல் மையம் அமைப்​ப​தற்​கான ஒப்​பந்​தம், தமிழக அரசு - சென்னை ஐஐடி - சர்​வம் ஏஐ நிறு​வனம் இடை​யில் முதல்​வர் மு.க.ஸ்​டா​லின் முன்​னிலை​யில் கையெழுத்​தானது.

இதில், தலை​மைச் செயலர் நா.​முரு​கானந்​தம், தொழில் துறை செயலர் வி.அருண்​ராய், தொழில் வழி​காட்டி நிறுவன மேலாண் இயக்​குநர் தாரேஸ் அகமது, சர்​வம் ஏஐ நிறுவன இணை நிறு​வனர் பிரத்​யுஷ் குமார் ஆகியோர் பங்​கேற்​றனர். பின்​னர் இந்த முதலீட்​டுத் திட்​டம் தொடர்​பாக தொழில் துறை அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா கூறிய​தாவது:

இன்று உலகமே செயற்கை நுண்​ணறிவு (ஏஐ) நோக்கி நகர்ந்து வரு​கிறது. மக்​களிடையே ஏஐ மூல​மாக எந்​த​வித​மான பாதிப்​பு​கள் பணி​களில் ஏற்​படும் என்ற கவலை இருக்​கும். ஆனால், தற்​போது வேலை​வாய்ப்​பு​களுக்கு எந்​த​வித பாதிப்​பும் இல்​லாமல், வேலை வாய்ப்​பு​களை அடுத்​தகட்​டத்​துக்கு எடுத்து செல்​லும் வகை​யில் விழிப்​புணர்வு அளிக்க சர்​வம் நிறு​வனத்​துடன், ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி, தொழில் துறை செயலர் இணைந்து ஒப்​பந்​தம் செய்​துள்​ளனர். தமிழக மக்​களுக்கு மிக​வும் உதவும் வகை​யில் இந்த திட்​டம் செயல்​படும்.

இந்​தி​யா​வில் அனைத்து மாநிலங்​களி​லும் இந்த திட்​டம் தேவைப்​படும். தமிழில் முதல் முறை​யாக ஏஐ தொழில்​நுட்​பம் உரு​வாக உள்​ளது. தமிழக மக்​களின் தகவல்​கள் திருடப்​படு​வது இதன்​மூலம் தவிர்க்​கப்​படும். தமிழகத்​துக்​கான தனிப்​பட்ட மைய​மாக இது செயல்​படும். இதன் மூலம் பல்​வேறு வேலை​வாய்ப்​பு​கள் உரு​வாக்​கப்​படும்.

அனை​வரும் ஏஐ தொழில்நுட்​பத்தை பயன்​படுத்​தும் நிலை​யில், நம் மூலம் வெளி​நாட்டு நிறு​வனங்​கள் வளர்ந்து வரு​கின்​றன. இதனால், நம் வீட்​டுக் குழந்​தையை முதலில் வளர்க்க முயற்​சிக்​கும் நோக்​கில் இத்​திட்​டம் தொடங்​கப்​பட்​டுள்​ளது. இவ்​வாறு அமைச்​சர் டி.ஆர்​.பி.​ராஜா தெரி​வித்​தார்.

சென்னை ஐஐடி இயக்​குநர் வி.​காமகோடி கூறுகை​யில், ‘‘விவ​சா​யம், மருத்​து​வம் மற்​றும் பல்​வேறு துறை​யில் ஏஐ தொழில்​நுட்​பம் நல்ல தாக்​கத்தை ஏற்​படுத்தி வரு​கிறது. இந்த தகவல் மையம் ஒவ்​வொரு துறை​யும், தனி​யார் நிறு​வன​மும் தங்​களின் தரவு​களை ஒரே பகு​தி​யில் இணைத்து கொள்​ளும் வகை​யில் அமைக்​கப்​படும். அனைத்து மக்​களை​யும் நிறு​வனங்​களை​யும் ஒன்​றிணைக்​கும் ஒரு திட்​ட​மாக இந்த திட்​டம் உள்​ளது’’ என்​றார்.

கொள்கை வெளி​யீடு: முன்​ன​தாக, தலை​மைச் செயல​கத்​தில் தொழில் துறை சார்​பில், தமிழ்​நாடு சேமிப்​புக் கிடங்கு கொள்கை (Tamil Nadu Warehousing Policy) 2026 ம‌ற்​று‌ம் தமிழ்​நாடு சுழற் பொருளா​தார முதலீட்​டுக் கொள்கை (Tamil Nadu Circular Economy Investment Policy) 2026 ஆகிய கொள்​கைகளை முதல்​வர் ஸ்டா​லின், துணை முதல்​வர் உதயநிதி ஸ்டா​லின் ஆகியோர் வெளி​யிட்​டனர்

சேமிப்​புக் கிடங்கு கொள்​கை​யானது, டெல்டா மற்​றும் தொழில் துறை​யில் பின்​தங்​கி​யுள்ள மாவட்​டங்​களில் சேமிப்​புக் கிடங்​கு​கள் அமைப்​ப​தற்கு நிதி சார்ந்த சிறப்பு ஊக்க சலுகைகள் வழங்​கும். தகு​தி​யான முதலீடு​களில் 25 சதவீத நிலை​யான மூலதன மானி​யம் (ரூ.2 கோடிக்கு மிகாமல்) மற்​றும் நில விலை மானிய​மாக வணிக நில விலை​யில் 50 சதவீத சலுகை அளிக்​கப்​படு​கிறது.

சர்வம் நிறுவனம் சார்பில் ரூ.10,000 கோடியில் ஏஐ தகவல் மையம்: முதல்வர் ஸ்டாலின் முன்னிலையில் ஒப்பந்தம்
நாளை பொங்கல் பண்டிகை கொண்டாட்டம்: சொந்த ஊருக்கு 16 லட்சம் பேர் பயணம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in