தஞ்சாவூர் மாநகராட்சியில் காலை உணவை திருப்பி அனுப்பிய தூய்மைப் பணியாளர்கள்

உணவு தரமாக இல்லை என்று அதிருப்தி; நடவடிக்கை எடுப்பதாக அதிகாரி தகவல்
தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் உள்ள 14-வது கோட்ட அலுவலகத்தில் நேற்று காலை உணவு தரமில்லை என்று கூறி, உணவைத் திருப்பி அனுப்பிய தூய்மைப் பணியாளர்கள்.

தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் உள்ள 14-வது கோட்ட அலுவலகத்தில் நேற்று காலை உணவு தரமில்லை என்று கூறி, உணவைத் திருப்பி அனுப்பிய தூய்மைப் பணியாளர்கள்.

Updated on
1 min read

தஞ்சாவூர்: தஞ்சை மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் ஒப்​பந்த தூய்​மைப் பணியாளர்கள் 16 பேர் நேற்று காலை தங்​களுக்கு வழங்​கப்​பட்ட உணவு தரமாக இல்லை என்று கூறி, ஒப்​பந்​த​தா​ரரிடமே திருப்பி வழங்​கி​விட்​டனர்.

தஞ்​சாவூர் மாநக​ராட்​சி​யில் பணி​யாற்​றும் தூய்​மைப் பணியாளர்கள், ஓட்​டுநர்​கள் என மொத்​தம் 757 பேருக்கு காலை உணவு வழங்​கும் திட்​டம் நேற்று முன்​தினம் தொடங்​கப்​பட்​டது.

தொடர்ந்​து, 2-வது நாளான நேற்று காலை 14-வது கோட்​டத்​தில் உணவு வழங்​கப்​பட்​ட​போது, உணவு தரமாக இல்லை என்​றும், ஒவ்​வாமை ஏற்​படு​வ​தாக​வும் கூறி அந்த உணவை தூய்​மைப் பணியாளர்கள் உண்ண மறுத்​து, அவற்றை ஒப்​பந்​த​தா​ரரிடமே வழங்​கி​விட்​டனர். மேலும், இதற்​கான காரணத்தை விளக்​கி, மாநக​ராட்​சி​யில் கடிதத்​தை​யும் வழங்​கினர்.

இதுகுறித்து தமிழ்​நாடு உள்​ளாட்​சித் துறை பணி​யாளர் சங்க மாவட்ட துணைத் தலை​வர் ஆனந்​த​ராஜ் கூறிய​தாவது: தூய்​மைப் பணி​யாளர்​களுக்கு காலை உணவு வழங்​கும் திட்​டத்​தின் கீழ் தஞ்​சாவூர் மாநக​ராட்​சி​யின் 5, 7, 8 ஆகிய கோட்​டங்​களில் ஒரு மாதம் பரீட்​சார்த்த முறை​யில் தின​மும் ரவா உப்​பு​மா, ரவா கிச்​சடி, சேமியா கிச்​சடி, வெண் பொங்​கல், இட்லி ஆகிய​வற்​றில் ஏதாவது ஒன்று வழங்​கப்​பட்​டது.

ஆனால், அந்த உணவு தரமாக இல்​லாத​தால் பல நாட்​கள் நாங்​கள் சாப்​பிட​வில்​லை. மேலும் இதுகுறித்து மாநக​ராட்சி அலு​வலர்​களிடம் தெரி​வித்​து, தரமாக உணவு வழங்க வேண்​டும் என கேட்​டுக் கொண்​டோம்.

இத்​திட்​டம் தொடங்​கப்​பட்ட பின் தரமான உணவு வழங்​கப்​படும் என்று அலு​வலர்​கள் உறுதி அளித்​தனர். ஆனால், தமிழகம் முழு​வதும் நேற்று (பிப். 9 இந்த திட்​டம் தொடங்​கப்​பட்ட பிறகு, இன்று காலை​யும் தரமில்​லாத ரவா கிச்​சடியையே வழங்​கி​னார்.

<div class="paragraphs"><p>தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பைகள்.</p></div>

தூய்மைப் பணியாளர்களுக்கு வழங்கப்பட்ட உணவுப் பைகள்.

எனவே, 14-வது கோட்​டத்​தில் பணி​யாற்​றும் ஒப்​பந்​தத் தொழிலா​ளர்​கள் 16 பேரும், உணவை அவர்​களிடமே திருப்பி வழங்​கி​விட்​டோம். தரமான உணவு தந்​தால்​தான் ஏற்​றுக் கொள்​வோம்.

இல்​லை​யெனில், எங்​களுக்கு இந்த உணவு வேண்​டாம். இவ்​வாறு அவர் கூறி​னார். இதுகுறித்து மாநகர நகர் நல அலு​வலர் நமச்​சி​வா​யத்​திடம் கேட்​ட​போது, “14-வது கோட்​டத்​தில் தூய்​மைப் பணியாளர்கள் காலை உணவைத் திருப்பி அனுப்​பிய தகவல் இது​வரை எனக்கு வரவில்​லை, விசா​ரித்து உரிய நடவடிக்கை எடுக்​கப்​படும்” என்​றார்.

<div class="paragraphs"><p>தஞ்சாவூர் சிவகங்கை பூங்காவில் உள்ள 14-வது கோட்ட அலுவலகத்தில் நேற்று காலை உணவு தரமில்லை என்று கூறி, உணவைத் திருப்பி அனுப்பிய தூய்மைப் பணியாளர்கள்.</p></div>
மத்திய அமைச்சரின் தகவல்கள் உண்மைக்கு புறம்பானவை - அமைச்சர் சிவசங்கர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in