குப்பையில் கிடந்த 45 பவுன் நகைகளை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: குற்றவாளியைப் போல் விசாரித்த போலீஸார்

குப்பையில் கிடந்த 45 பவுன் நகைகளை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: குற்றவாளியைப் போல் விசாரித்த போலீஸார்
Updated on
1 min read

சென்னை: குப்​பையோடு குப்​பை​யாக கிடந்த 45 பவுன் தங்க நகைகளை, காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்த தூய்​மைப் பணி​யாளரை போலீஸார் குற்றவாளியைப் போல விசா​ரித்த சம்​பவம் அதிர்ச்​சியை ஏற்​படுத்​தி உள்ளது.

திரு​வல்​லிக்​கேணி, கிருஷ்ணாம்​பேட்டை பகு​தி​யைச் சேர்ந்​தவர் பத்​மா(50). இவர் சென்னை மாநக​ராட்​சி​யில் ஒப்​பந்​தப் பணி​யாள​ராக பணி செய்து வரு​கிறார். இவர் நேற்று தி.நகரில் உள்ள மகா​ராஜா சந்​தானம் தெரு​வில் தூய்​மைப் பணி​யில் ஈடு​பட்​டிருந்​தார்.

அப்​போது அங்கு குப்​பையோடு குப்​பை​யாக கிடந்த கவர் ஒன்றை எடுத்து பார்த்​த​போது, ஐஸ்​கிரீம் டப்​பாவுக்​குள் 45 பவுன் தங்க நகை இருப்​பது தெரிந்​தது. உடனே அதை அவரது மேற்​பார்​வை​யாளரிடம் பத்மா ஒப்​படைத்​தார்.

அவர் நகைகளை பாண்​டிபஜார் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​துள்​ளார். இதையடுத்து சட்​டம்​-ஒழுங்கு போலீஸார் பத்​மாவை அழைத்து அவரிடம் விசா​ரித்​தனர்.

ஒரு மணி நேர விசா​ரணைக்கு பிறகு அக்​காவல் நிலைய குற்​றப்​பிரிவு காவல் ஆய்​வாளரிடம் பத்மா ஒப்​படைக்​கப்​பட்​டார். அவர் பத்​மா​விடம் விசா​ரணை நடத்​தி​யுள்​ளார். இப்​படி மதி​யம் 3.30 முதல் இரவு 7.30 மணிக்கு பிறகும் விசா​ரணை தொடர்ந்​துள்​ளது.

இதை அறிந்து தூய்​மைப் பணி மேற்​பார்​வை​யாளர் தலை​மையி​லானவர்​கள் திரண்​டு, “குப்​பை​யில் கிடந்த நகைகளை காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்த பணி​யாளரை ஏன் இப்​படி சிறை வைத்து விசா​ரிக்​கிறீர்​கள். அவர் என்ன குற்​றம் செய்​தார்.

கேட்​பாரற்று கிடந்த நகையை போலீ​ஸில் ஒப்​படைத்​தது குற்​ற​மா? சென்னை காவல் ஆணை​யர் அலு​வல​கத்​தில் ஒப்​படைக்​கலாம் என சக பணி​யாளர்​கள் தெரி​வித்​தனர்.

ஆனால், சம்​பந்​தப்​பட்ட எல்​லைக்கு உட்​பட்ட காவல் நிலை​யத்​தில்​தான் ஒப்​படைக்க வேண்​டும் எனக் கருதி பாண்​டிபஜார் காவல் நிலை​யத்​தில் ஒப்​படைத்​தோம்.

ஆனால் போலீஸார், நகையை நேர்​மை​யாக ஒப்​படைத்த எங்​களது பணி​யாளரை குற்​ற​வாளி​போல் நடத்​துகின்​றனர்” என வருத்​தத்​துடன் தெரி​வித்​தனர்​. ​சாலை​யோரம்​ கண்​டெடுக்​கப்​பட்​ட நகைகளின்​ மதிப்​பு ரூ.45 லட்​சம்​ என்​பது குறிப்​பிடத்​தக்​கது.

குப்பையில் கிடந்த 45 பவுன் நகைகளை போலீஸில் ஒப்படைத்த தூய்மைப் பணியாளர்: குற்றவாளியைப் போல் விசாரித்த போலீஸார்
மெரினாவில் இரவில் அணிவகுத்து சென்ற பைக்குகள்: 600 இருசக்கர வாகனங்களில் சாலை பாதுகாப்பு பேரணி

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in