சபரிமலை தரிசன முன்பதிவில் முறைகேடா? - 40% பக்தர்கள் வராததால் தேவசம்போர்டு அதிர்ச்சி

தினமும் கூடுதலாக 5 ஆயிரம் பேருக்கு அனுமதி
சபரிமலை கருவறை அருகே மட்டும் பக்தர்கள் இருக்க பின்னணியில் காலியாகக் கிடக்கும் இரும்பு மேம்பாலப் பகுதி.

சபரிமலை கருவறை அருகே மட்டும் பக்தர்கள் இருக்க பின்னணியில் காலியாகக் கிடக்கும் இரும்பு மேம்பாலப் பகுதி.

Updated on: 
1 min read

குமுளி: சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் முன்ப​திவு செய்த பக்​தர்​களில் 60 சதவீதம் பேரே தரிசனத்​துக்கு வரு​கின்​றனர். எனவே, இதில் முறைகேடு எது​வும் நடை​பெற்​றுள்​ளதா என்று தேசவம் போர்டு விசா​ரணையை தொடங்கி உள்​ளது. இந்​நிலை​யில், தினமும் கூடுதலாக 5 ஆயிரம் பேரை அனுமதிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

கேரளம் மாநிலம் சபரிமலை ஐயப்​பன் கோயி​லில் இந்த ஆண்​டுக்​கான மண்​டல கால பூஜை, கடந்த 17-ம் தேதி தொடங்​கியது. இதற்​காக, ஆன்​லைன் மற்​றும் நேரடி முன்​ப​திவு​கள் மூலம் தினமும் 80 ஆயிரம் பக்​தர்​கள் அனுமதிக்​கப்​படுவார்​கள் என அறி​விக்​கப்​பட்​டிருந்​தது. வழக்​க​மாக கார்த்​திகை முதல் தேதி​யில் இருந்தே பக்​தர்​கள் கூட்​டம் அலைமோதும்.

ஆனால், இந்த ஆண்டு மண்​டல காலத்​தின் தொடக்​கத்​தில் இருந்தே பக்​தர்​களின் வருகை குறைவாகவே இருந்​தது. இத​னால் பம்பை, சந்​நிதானம் உள்​ளிட்ட பகுதி​களில் நெரிசல் குறைந்து பக்​தர்​கள் நிதானமாக தரிசனம் செய்​யும் நிலை ஏற்​பட்​டுள்​ளது. பக்​தர்​களுக்கு இது மனதிருப்​தியை ஏற்​படுத்​தினாலும், முன்​ப​திவு செய்​தவர்​களில் சுமார் 40 சதவீதம் பேர் வரை வராதது தேவசம் போர்டு அதி​காரி​களை சந்​தேகத்​துக்கு உள்​ளாக்கி உள்​ளது.

டிசம்​பர் வரை முன்​ப​திவு​கள் முடிந்​த​தாக, சிவப்பு நிற வண்​ணத்​தில் குறியீடுகள் காட்​டு​கின்​றன. இத​னால், அந்த தேதி​களில் உண்​மையிலேயே சபரிமலைக்கு செல்ல விரும்​பும் பக்​தர்​கள் முன்​ப​திவு செய்ய முடி​யாத நிலை உள்​ளது. கடந்த ஆண்டு சுற்​றுலா ஏஜென்​சிகள் முன்​ப​திவு​களை அதிக அளவில் செய்​திருந்​தன. அதுபோல, தற்​போதும் நடை​பெற்​றுள்​ளதா என்ற கோணத்​தில் அதி​காரி​கள் விசா​ரணை​யைத் தொடங்கி உள்​ளனர். அத்​துடன், பக்​தர்​கள் வருகை குறைந்​துள்​ள​தால் தினமும் 5 ஆயிரம் பேரை கூடுதலாக அனுமதிக்க அதி​காரி​கள் முடிவு செய்​துள்​ளனர்.

இது​குறித்து திரு​விதாங்​கூர் தேவசம் போர்டு தலை​வர் கே.ஜெயக்​குமார் கூறிய​தாவது: கடந்த ஆண்​டின் தொடக்​கத்​திலேயே பக்​தர்​கள் கூட்​டம் அதி​க​மாக இருந்​தது. அதை கணக்​கிட்டு, கூட்ட மேலாண்​மையில் அதி​கம் கவனம் செலுத்​தப்​பட்​டது. ஆனால், முன்​ப​திவு செய்​தவர்​களில் 60 சதவீத பக்​தர்​களே சபரிமலைக்கு வரும் நிலை உள்​ளது. இத​னால், தினமும் கூடுதலாக 5 ஆயிரம் பக்​தர்​களை அனுமதிக்க முடிவு செய்​யப்​பட்​டுள்​ளது.

முன்​ப​திவு செய்த தேதி​யில் மட்​டுமே பக்​தர்​கள் அனுமதிக்​கப்​படுவர். வர​முடி​யாத பக்​தர்​கள் பதிவை ரத்து செய்ய வேண்​டும். அப்​போது​தான் மற்ற பக்​தர்​களுக்கு தரிசன வாய்ப்பு கிடைக்​கும். வராத பக்​தர்​களின் ஆதார் எண் உள்​ளிட்​டவை தனியே எடுக்​கப்​பட்டு விசா​ரிக்​கப்​பட உள்​ளது. இவ்​வாறு அவர் தெரி​வித்​தார்.சபரிமலை கருவறை அருகே மட்டும் பக்தர்கள் இருக்க பின்னணியில் காலியாகக் கிடக்கும் இரும்பு மேம்பாலப் பகுதி.

<div class="paragraphs"><p>சபரிமலை கருவறை அருகே மட்டும் பக்தர்கள் இருக்க பின்னணியில் காலியாகக் கிடக்கும் இரும்பு மேம்பாலப் பகுதி.</p></div>
கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு டிசம்பர் 18-ம் தேதிக்கு தள்ளிவைப்பு

X