தமிழகத்தில் 100 இடங்களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணி: மழையிலும் கட்டுப்பாடுடன் பங்கேற்ற தொண்டர்கள்

சென்னை எழும்பூரில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்எஸ்எஸ் கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். | படம்: எல்.சீனிவாசன் |

சென்னை எழும்பூரில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்எஸ்எஸ் கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். | படம்: எல்.சீனிவாசன் |

Updated on: 
2 min read

சென்னை: விஜயதசமியை முன்​னிட்டு, சென்​னை​யில் 7 இடங்​கள் உள்​பட தமிழகம் முழு​வதும் 100 இடங்​களில் ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணிகள் நடை​பெற்​றன.

ஒவ்​வொரு பகுதி​யிலும் நூற்​றுக்​கணக்​கானோர் சீருடை​யில் கட்டுப்பாடுடன் பங்​கேற்​றனர். விஜயதசமியை முன்​னிட்டு, தமிழகம் முழு​வதும் 128 இடங்​களில் அணிவகுப்பு பேரணி மற்​றும் பொதுக்​கூட்​டம் நடத்த ஆர்​எஸ்எஸ் அமைப்​பினர் காவல்​துறை​யிடம் அனுமதி கோரினர். காவல்​துறை அனுமதி மறுத்​ததைத் தொடர்ந்து, சென்னை உயர் நீதி​மன்​றத்தை நாடினர்.

இதையடுத்து, உச்ச நீதி​மன்ற வழிகாட்​டுதல் அடிப்​படை​யில் பேரணி நடத்த உயர் நீதி​மன்​றம் அனுமதி வழங்​கியது. இதைத் தொடர்ந்து, முதற்​கட்​ட​மாக தமிழகம் முழு​வதும் 100 இடங்​களில் நேற்று மாலை பேரணி நடை​பெற்​றது.

சென்னை எழும்​பூரில் ரமடா ஹோட்​டல் அருகே பேரணி தொடங்​கியது. தொடக்க நிகழ்ச்​சி​யில் ஆர்​எஸ்எஸ் கொடிக்கு சிறப்பு பூஜைகள் செய்​யப்​பட்டு, ஆரத்தி காண்​பிக்​கப்​பட்​டது.

<div class="paragraphs"><p>தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றோர்.</p></div>

தஞ்சாவூரில் நடைபெற்ற ஆர்எஸ்எஸ் அணிவகுப்பு பேரணியில் பங்கேற்றோர்.

இதில் பாஜக முன்​னாள் மாநிலத் தலை​வர் தமி​ழிசை சவுந்​தரராஜன், கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்​தினார். பின்​னர், மேள​தாளங்​கள் முழங்க பேரணி தொடங்​கியது. அப்​போது மழை பெய்​த​போதிலும் தொண்​டர்​கள் சீருடை அணிந்து பங்​கேற்​றனர்.

பேரணி, எல்.ஜி. சாலை, கூவம் ஆற்​றுச் சாலை வழி​யாகச் சென்று ராஜரத்​தினம் மைதானம் அருகே நிறைவடைந்​தது. இதைத் தொடர்ந்து பொதுக்​கூட்​டம் நடை​பெற்​றது.

இதில் ராமகிருஷ்ண மடத்​தின்  ராமகிருஷ்ண விஜயம் இதழின் ஆசி​ரியர் சுவாமி அபவர்​கானந்த மஹராஜ், ஆர்​எஸ்எஸ் தென்​பாரத செயற்​குழுஉறுப்​பினர் ஆனந்த் ரகுநாதன், மாவட்​டத் தலை​வர் சுரேஷ் ரகுராமன் உள்​ளிட்​டோர் கலந்​து​ கொண்டு சிறப்​புரையாற்​றினர்.

பெரம்​பூர் பெரவள்​ளூர் சந்​திப்பு அருகே தொடங்​கிய பேரணியை, ஆர்​எஸ்எஸ் தென்​பாரத சேவைப் பொறுப்​பாளர் பூ.மு.ரவிக்​குமார் தொடங்கி வைத்​தார். தொடர்ந்து அவர் சிறப்​புரையாற்​றினார்.

திரு​வொற்​றியூர் காலடிப்​பேட்​டை​யில் நடை​பெற்ற பேரணியை, ஆர்​எஸ்எஸ் தென்​பாரத தர்ம விழிப்​புணர்வு அமைப்​பாளர் ராம ராஜசேகர் தொடங்கி வைத்​தார்.

பின்​னர், பெரியார் நகரில் நடை​பெற்ற பொதுக்​கூட்​டத்​தில் அவர் சிறப்​புரையாற்​றினார். ஐயப்​பன்​தாங்​கல் பேருந்து பணிமனை அருகே நடை​பெற்ற பேரணி​யில், ஆர்​எஸ்எஸ் வடதமிழகப் பிரச்​சா​ரப் பிரிவு மாநில இணைச் செய​லா​ளர் கோபால​கிருஷ்​ணன் உள்​ளிட்​டோர் பங்​கேற்​றனர்.

இதேபோல், கொரட்​டூர், குரோம்​பேட்டை, மேட​வாக்​கம் உள்​ளிட்ட பகுதி​களி​லும் பேரணிகள் நடை​பெற்​றன. அந்​தவகை​யில் சென்​னை​யில் 7 இடங்​கள் உள்​பட தமிழகம் முழு​வதும் 100 இடங்​களில் நேற்று பேரணி நடை​பெற்​றது.

பேரணிகள் நடை​பெற்ற அனைத்து இடங்​களி​லும் அசம்​பாவிதங்​கள் ஏற்​படா​மல் தடுக்​கும் வகை​யில் நூற்​றுக்​கணக்​கான போலீ​ஸார் பாது​காப்​புப் பணி​யில் ஈடு​பட்​டனர். இதற்​கிடையே, தமிழகத்​தில் மீதமுள்ள 28 இடங்​களில் வரும் நவ.1-ம் தேதி அணிவகுப்பு பேரணி நடை​பெற உள்​ள​தாக ஆர்​எஸ்எஸ் தெரி​வித்​துள்​ளது.

<div class="paragraphs"><p>சென்னை எழும்பூரில் பாஜக முன்னாள் மாநிலத் தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் ஆர்எஸ்எஸ் கொடிக்கு ஆரத்தி எடுத்து மரியாதை செலுத்தினார். | படம்: எல்.சீனிவாசன் |</p></div>
இன்று புயலாக வலுப்பெறும் ‘அர்னாப்’ - ஆந்திராவில் அக்.28-ல் கரை கடக்கிறது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in