வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு
Updated on
1 min read

சென்னை: வடகிழக்​குப் பருவமழை முன்​னேற்​பாட்டு பணி​களுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ள​தாக சென்னை மாநக​ராட்சி தெரிவித்​துள்​ளது.

இதுகுறித்து வெளி​யிடப்​பட்ட அறிக்​கை​யில் கூறி​யிருப்​ப​தாவது: சென்னை மாநக​ராட்​சி​யில் வடகிழக்​குப் பரு​வ​மழையை முன்​னிட்டு கூடு​தலாக ரூ.58.15 கோடி மதிப்​பீட்​டிலான பணி​களுக்கு நிர்​வாக அனு​மதி வழங்​கப்​பட்டு பணி​கள் நடை​பெற்று வரு​கிறது.

பரு​வ​மழைக்​கான முன்​னெச்​சரிக்கை பராமரிப்​புப் பணி​கள் மேற்​கொள்​வதற்கு வார்டு வாரி​யாக தலா ரூ.5 லட்​சம் வீதம் 200 வார்​டு​களுக்கு மொத்​தம் ரூ.10 கோடி வழங்​கப்​பட்​டுள்​ளது.

மேலும், உடனடி சாலை சீரமைப்பு மற்​றும் மறுசீரமைப்பு பணி​களுக்​காக 15 மண்​டலங்​களுக்​கும் மொத்​தம் ரூ.22 கோடி ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது. மின்​சார மற்​றும் இயந்​திர உபகரணங்​களை பழுது​பார்ப்​ப​தற்​காக ரூ.15 லட்​சம் ஒதுக்​கீடு செய்​யப்​பட்​டுள்​ளது.

தாழ்​வான பகு​தி​களில் தேங்​கும் மழைநீரை உடனுக்​குடன் அகற்​று​வதற்​காக 150 உயர் திறன் மோட்​டார்​கள் மற்​றும் 500 டிராக்​டர் மூலம் இயக்​கப்​படும் மோட்​டார்​கள், பம்​பு​கள் வாங்​கு​வதற்​காக மொத்​தம் ரூ.26 கோடி மதிப்​பீட்​டில் நிர்​வாக அனு​மதி வழங்​கப்​பட்​டுள்​ளது.

1,000 பணி​யாளர்​கள்

பரு​வ​மழை தொடர்​பான பணி​களுக்​காக, ஒரு வார்​டுக்கு 5 பணி​யாளர்​கள் வீதம் கூடு​தலாக 1,000 பணி​யாளர்​கள் நியமிக்​கப்​படு​வர்.

இவர்​கள் மழைநீர் வடி​கால்​கள் மற்​றும் வண்​டல் வடிகட்​டித் தொட்​டிகளில் தூர்​வாரும் பணி​கள் மேற்​கொள்​ளுதல், அபாயகர​மான மரக்​கிளை​களை அகற்​று​தல் உள்​ளிட்ட பணி​களை மேற்​கொள்​வர். இவ்​வாறு அறிக்​கை​யில் கூறப்பட்​டுள்​ளது.

வடகிழக்கு பருவமழை முன்னேற்பாட்டு பணிகளுக்கு ரூ.58.15 கோடி ஒதுக்கீடு
காஞ்சிபுரம் | கோயில் திருவிழா இரட்டைக் கொலை விவகாரத்தில் 3 பேர் கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in