மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம்: வாசன் வலியுறுத்தல்

ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
Updated on
1 min read

தஞ்சாவூர்: மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.35 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார்.

பாபநாசம் வட்டம், கபிஸ்தலத்தில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு வந்த தமிழ் மாநில காங்கிரஸ் தலைவரும், எம்.பியுமான ஜி. கே. வாசன் செய்தியாளர்களிடம் கூறியதாவது: தமிழ்நாட்டில் உற்பத்தியாகின்ற செங்கரும்பு அச்சுவெல்லம், உருண்டை வெல்லம் ஆகியவற்றை தமிழக அரசே நேரடியாக கொள்முதல் செய்து பொங்கல் பண்டிகைக்கு வழங்க வேண்டும்.

தஞ்சாவூர், நாகை, திருவாரூர், மயிலாடுதுறை, ஆகிய டெல்டா மாவட்டங்களில் தொடர் மழை, புயலால் பாதிக்கப்பட்ட சம்பா தாளடி நெற்பயிர்கள், முழுமையாக ஒரு விவசாயிகள் கூட விடுபடாமல் கணக்கெடுத்து அனைத்து விவசாயிகளுக்கும் உரிய நிவாரணம் வழங்க வேண்டும்.

மேலும் கரும்பு, வாழை, வெற்றிலை, மஞ்சள் மற்றும் கிழங்கு வகைகள் முழுமையாக அடியோடு சேதமடைந்துள்ளதால், வேளாண்மை துறை அதிகாரிகளும், தோட்டக்கலை அதிகாரிகளும், ஆய்வு மேற்கொண்டு உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.

முழுமையாக பாதித்த நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ 35 ஆயிரம் வழங்க வேண்டும், இதே போல் 1000 நாட்களுக்கு மேலாக தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வரும் திருமண்டங்குடி திருஆரூரான் கரும்பு விவசாயிகளுக்கு கரும்புக்கான நிலுவைத் தொகை வழங்குவதற்கு உரிய தீர்வு காண வேண்டும்.

காவிரி டெல்டா மாவட்டங்கள் வறண்ட மாவட்டமாக மாறாமல் தடுப்பதற்கு மேகேதாட்டு அணை கட்டுவதை தடுப்பதற்கு தமிழக அரசு வலியுறுத்துவதுடன், தஞ்சாவூர் - அரியலூர் மாவட்டம் இடையே கொள்ளிடம் ஆற்றின் குறுக்கே குடிகாடு-மேலராமநல்லூர் இடையே உயர்மட்ட மேம்பாலம் கட்டுவதற்கு உடனடியாக தமிழக அரசு நிதி ஒதுக்கீடு செய்து திட்டத்தை செயல்படுத்த வேண்டும் .

எங்கள் கூட்டணிக்கு பல்வேறு கட்சிகள் வருகின்ற வாய்ப்புகள் உள்ளது. தேர்தல் அறிவித்த பிறகு கூட்டணி கட்சிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி தொகுதிகள் குறித்து முடிவுகள் அறிவிக்கப்படும். இவ்வாறு வாசன் தெரிவித்தார்.

ஜி.கே.வாசன் | கோப்புப்படம்
“சனாதனம் மக்களிடையே பிரிவினையை ஏற்படுத்துவதால் இந்த அரசு எதிர்க்கிறது” - அமைச்சர் சேகர்பாபு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in