ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் நிதி நிறுவன பங்குதாரரின் வீட்டில் ரூ.1.25 கோடி பறிமுதல்

வருமானவரித் துறை நடவடிக்கை
ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் நிதி நிறுவன பங்குதாரரின் வீட்டில் ரூ.1.25 கோடி பறிமுதல்
Updated on
1 min read

ஆற்காடு: ஆற்காடு அடுத்த விளப்​பாக்​கத்​தில் தனி​யார் நிதி நிறுவன பங்​கு​தா​ரர் வீட்​டில் இருந்து ரூ.1.25 கோடியை சென்னை வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் பறி​முதல் செய்​தனர்.

ராணிப்​பேட்டை மாவட்​டம் ஆற்​காடு அடுத்த விளாப்​பாக்​கம் கிராமத்​தைச் சேர்ந்த தனி​யார் நிறுவன பங்​கு​தா​ர​ரான இளங்​கோவன் (67) என்​பவரின் வீட்​டிலும், ஆனைமல்​லூர் அருகே தனி​யார் உணவு பொருட்​கள் தயாரிக்​கும் நிறு​வனத்​தி​லும் நேற்று முன்​தினம் சென்னை வரு​மான வரித்​துறை​யினர் மற்​றும் தேர்​தல் கண்​காணிப்பு அதி​காரி​கள் திடீர் சோதனை மேற்​கொண்​டனர்.

இதில், இளங்​கோ​ முறை​யான வரி செலுத்​த​வில்லை என எழுந்த குற்​றச்​சாட்​டின்​படி இந்தச் சோதனை நடத்தப்பட்டது.

இதன்படி அவரதுவீட்​டில் இருந்து உரிய ஆவணங்​கள் மற்​றும் முறையாக கணக்​குகள் இல்​லாமல் வைத்​திருந்த மொத்​தம் ரூ.1.25 கோடி​யும், முக்​கிய ஆவணங்​களை​யும் வரு​மான வரித்​துறை அதி​காரி​கள் பறி​முதல் செய்து சென்​னைக்கு கொண்டு சென்​றனர்.

ஆனைமல்​லூர் அருகே தனி​யார் உணவு பொருட்​கள் தயாரிக்​கும் நிறு​வனத்​தில் நடத்​திய சோதனை​யில் பணம் எது​வும் கைப்​பற்​றப்பட​வில்​லை.

மேலும், இளங்​கோ​வின் வீட்​டில் இருந்த பணம் தேர்​தலுக்கு வாக்​காளர்​களுக்கு ஓட்​டுக்​காக கொடுக்க வைத்​திருந்தபணமா என்ற சந்​தேகத்தை எழுப்​பி​யுள்​ளது.

ஆற்காடு அடுத்த விளாப்பாக்கத்தில் நிதி நிறுவன பங்குதாரரின் வீட்டில் ரூ.1.25 கோடி பறிமுதல்
சேலம் அருகே அரசுப் பள்ளியில் புகுந்து ஆசிரியையை கொன்ற கணவர்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in