புதுச்சேரியில் தீபாவளிக்கு எஸ்சி, எஸ்டி மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்குப் பதில் ரூ.1,000 அறிவிப்பு

அரசு ரூ.13.38 கோடி ஒதுக்கீடு
கோப்புப் படம் 

கோப்புப் படம் 

Updated on: 
1 min read

புதுச்சேரி: தீபாவளிக்கு புதுச்சேரி, காரைக்கால் உட்பட நான்கு பிராந்தியங்களில் வசிக்கும் எஸ்சி, எஸ்டி மக்களுக்கு இலவச வேட்டி, சேலைக்கு பதிலாக ரூ.1,000 வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படவுள்ளது. இதற்கு ரூ.13.38 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

புதுச்சேரி யூனியன் பிரதேசத்தின் 18 வயது பூர்த்தியடைந்த ஒவ்வொரு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களுக்கு தீபாவளி பண்டிகையை ஒட்டி வழங்கப்படும் வேட்டி மற்றும் சேலைக்கு பதில் பணமாக ரூ.1,000 வழங்கப்படும்.

அதன்படி புதுச்சேரி மாநிலத்தில் உள்ள 47,180 குடும்ப பங்கீட்டு அட்டைககளில் உள்ள 1,33,890 (60,877 ஆண்கள் மற்றும் 73,013 பெண்கள்) பயனாளிகளுக்கு ரூ.1,000 வீதம் சுமார் 13 கோடி 38 லட்சம் ரூபாய் அவரவர் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது என்று புதுச்சேரி அரசு தெரிவித்துள்ளது.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்&nbsp;</p></div>
போராட்டங்கள் மூலம் ஆட்சியைப் பிடிக்க ராகுல் காந்தி கனவு காண்கிறார்: புதுச்சேரி பாஜக விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in