ரூ.100 கோடி லஞ்சம் விவகாரம்: அன்பில் மகேஸ் முன் ஜாமீன் மனு தள்ளுபடி

அன்பில் மகேஸ் | கோப்புப்படம்

அன்பில் மகேஸ் | கோப்புப்படம்

Updated on: 
1 min read

சென்னை: திமுக ஆட்சியில் பள்ளிகளுக்கு அங்கீகாரம் வழங்க ரூ.100 கோடிக்கு மேல் லஞ்சம் ஊழல் செய்ததாக தொடரப்பட்ட வழக்கில் முன் ஜாமீன் கோரி திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

முந்தைய திமுக ஆட்சிக் காலத்தில் தனியார் பள்ளிகளுக்கு நிரந்தர அங்கீகாரம் உள்ளிட்ட பிற அனுமதிகளைப் பெற்றுத் தருவதாகக் கூறி பள்ளி நிர்வாகிகளிடம் ரூ.100 கோடி வரை வசூலித்து மோசடி நடந்ததாக சம்பந்தப்பட்ட பள்ளி நிர்வாகிகள் போலீஸில் புகார் கொடுத்தனர்.

அதன்பேரில், திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ், தனியார் பள்ளிகள் சங்கத் தலைவர் பி.டி.அரசகுமார், சங்க மாநிலப் பொருளாளர் முத்துக்குமார் உள்ளிட்டோருக்கு எதிராக சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

இந்த வழக்கில் முன்ஜாமீன் கோரி அன்பில் மகேஸ் தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. திமுக முன்னாள் அமைச்சர் அன்பில் மகேஸ் தாக்கல் செய்திருந்த முன் ஜாமீன் மனுவை இன்று விசாரித்த உயர் நீதிமன்ற நீதிபதி வி.லட்சுமி நாராயணன், அவரின் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.

<div class="paragraphs"><p>அன்பில் மகேஸ் | கோப்புப்படம்</p></div>
ஜெம் வீரமணி வழக்கு: லஞ்சத்தில் ரூ.24 கோடிக்கு தங்கம் வாங்கிய அதிகாரி அருணை விசாரிக்க வேண்டும் என புதிய மனு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in