

கைது செய்யப்பட்ட நாகராஜ், மணிமாறன்.
சென்னை: சென்னை வந்த ஜார்க்கண்ட் தொழிலாளர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட ஆட்டோ ஓட்டுநர், கூட்டாளியுடன் கைது செய்யப்பட்டார்.
ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த கரண், மோண்டி, புனா பாடி ஆகிய 3 பேரும் சென்னை சூளை பகுதியில் உள்ள கடை ஒன்றில் பணி செய்ய கடந்த 3-ம் தேதி ரயில் மூலம் சென்னை எழும்பூர் வந்தடைந்தனர். பின்னர், அங்கிருந்து, ஆட்டோவில் சூளை நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
பணம், செல்போன் பறிப்பு மோண்டி வழியில் இறங்கி விட மற்ற இருவரும் ஆட்டோவில் சென்று கொண்டிருந்தனர். அப்போது, ஆட்டோ ஓட்டுநர் மற்றும் அவருக்கு அருகில் அமர்ந்திருந்த நபருடன் சேர்ந்து ஆட்டோவில் இருந்த கரண் மற்றும் புனாபாடி ஆகியோரை கத்தியைக் காட்டி மிரட்டி, அவர்கள் வைத்திருந்த செல்போன்கள் மற்றும் பணத்தை பறித்தனர். பின்னர், அவர்களை ரித்தர்டன் சாலை அருகே இறக்கிவிட்டு தப்பினர்.
அம்பத்தூர், அயப்பாக்கம் இதுகுறித்து, எழும்பூர் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதன்படி, போலீஸார் வழக்குப் பதிந்து விசாரித்தனர். இதில், ஜார்க்கண்ட் மாநில இளைஞர்களை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்டது அம்பத்தூர், அயப்பாக்கத்தைச் சேர்ந்த நாகராஜ் (28) மற்றும் அவரது கூட்டாளி என்பது தெரிய வந்தது.
இதையடுத்து, தலைமறைவாக இருந்த நாகராஜை போலீஸார் கைது செய்தனர். அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளியான காஞ்சிபுரம் மாவட்டம், மேலக்கோட்டையூரைச் சேர்ந்த மணிமாறன் (37) என்பவரையும் போலீஸார் கைது செய்தனர்.