கம்பரின் படைப்புகள் மீதான ஆய்வுகளை அதிகரிக்க வேண்டியது நமது கடமை: ஆளுநர் ஆர்.என்.ரவி வலியுறுத்தல்

பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘கல்விக்கூடங்களில் கம்பர் விருது' வழங்கும் விழாவில், மாநில அளவில் நடைபெற்ற கம்பராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார். உடன், ‘இந்து’ என்.ரவி, சுதா சேஷய்யன், கே.என்.ராமசாமி, வெங்கடாச்சலம், பி.ஜி.சுப்பிரமணியம் ஆகியோர்.

பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘கல்விக்கூடங்களில் கம்பர் விருது' வழங்கும் விழாவில், மாநில அளவில் நடைபெற்ற கம்பராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார். உடன், ‘இந்து’ என்.ரவி, சுதா சேஷய்யன், கே.என்.ராமசாமி, வெங்கடாச்சலம், பி.ஜி.சுப்பிரமணியம் ஆகியோர்.

Updated on
1 min read

சென்னை: ‘கம்​பரின் படைப்​பு​கள் மீதான ஆய்​வு​களை அதி​கரிக்க வேண்​டும்’ என்று ஆளுநர் ஆர்​.என்​.ரவி தெரிவித்​தார். பாரதிய வித்யா பவன் சார்​பில் ‘கல்விக் கூடங்​களில் கம்​பர்’ விருது வழங்​கும் விழா சென்னை மயி​லாப்​பூரில் நேற்று நடை​பெற்​றது.

இதில் சிறப்பு விருந்​தின​ராகக் கலந்​து​கொண்ட ஆளுநர் ஆர்​.என்​.ர​வி, பள்ளி மற்​றும் கல்​லூரி அளவில் நடத்​தப்​பட்ட பேச்​சுப் போட்​டிகளில், வெற்​றி​பெற்ற மாணவர்​களுக்கு பாராட்​டுச் சான்​றிதழ்​களை வழங்​கி​ பேசி​ய​தாவது: கம்ப ராமாயணம் உட்பட இதி​காசங்​கள் நமது கலாச்​சா​ரம், பண்​பாடு போன்ற வாழ்​வியல் முறை​களை எடுத்​துரைக்​கின்​றன.

நம் நாட்​டின் வடகிழக்​கில் வசிக்​கும் பழங்​குடிகள் முதல் காஷ்மீர் வரை உள்ள அனைத்து தரப்​பினரும் ராமரை ஏற்​றுக் கொண்​டுள்ளனர். அயோத்தி ராமர் கோயில் பூமி பூஜைக்​காக நாட்டின் அனைத்து பகு​தி​களில் இருந்து பொது​மக்​கள் புனித நீர் மற்​றும் மண்ணை அயோத்திக்கு அனுப்பி வைத்​தனர். இதில் கிறிஸ்தவர்​, பழங்​குடி​யினரும் அடங்​கு​வர்.

அந்த வகை​யில் தமிழகத்​தில் தேசிய விடு​தலை உணர்வை உரு​வாக்​கிய​தில் கம்​பரின் படைப்​பு​களுக்கு முக்​கிய பங்​குள்​ளது. ஆனால், மாநிலத்​தில் அதற்கு உரிய அங்​கீ​காரம் கிடைக்​க​வில்​லை. பக்​தி, அறி​வியலுக்கு எதி​ரானது எனக்​கூறி அவற்றை சிலர் அழிக்க முயல்கின்​றனர்.

இந்​தி​யில் துளசி​தாசர் எழு​திய ‘ராமசரித​மானஸ்’ மீது ஆயிரக்​கணக்​கான முனைவர் பட்ட ஆய்​வு​கள் உள்ளன, ஆனால், தமிழில் கம்​பர் எழு​திய ராமாயணம் மீது குறைந்த அளவிலே ஆய்​வு​கள் இருக்​கின்​றன. எனவே, கம்​பரின் படைப்​பு​கள் மீதான ஆய்​வு, ஆராய்ச்​சிகளை அதி​கரிக்க வேண்​டியது நமது கடமை​யாகும். இவ்​வாறு அவர் பேசி​னார்.

இந்​நிகழ்​வில் பார​திய வித்​யாபவன் சென்னை கேந்​தி​ரா​வின் தலை​வர் ‘இந்து’ என்​.ர​வி, கமிட்டி உறுப்​பினரும், செம்​மொழி உயராய்வு மையத்​தின் துணைத்​தலை​வரு​மான சுதா சேஷய்​யன், சென்னை கேந்​தி​ரா​வின் இயக்​குநர் கே.என்​.​ராம​சாமி, துணை இயக்​குநர் வெங்​க​டாச்​சலம்​, பவன்ஸ் ராஜாஜி வித்யாஷ்ரம் முதல்வர் பி.ஜி.சுப்பிரமணியம் ஆகியோர் கலந்து கொண்​டனர். முன்​ன​தாக கிண்​டி​ ஆளுநர் மாளிகை வளாகத்​தில் அமைக்​கப்பட்​டுள்ள கம்​பர் சிலையை ஆளுநர் ரவி திறந்து வைத்​தார்.

<div class="paragraphs"><p>பாரதிய வித்யாபவன் சென்னை கேந்திரா சார்பில் நடைபெற்ற ‘கல்விக்கூடங்களில் கம்பர் விருது' வழங்கும் விழாவில், மாநில அளவில் நடைபெற்ற கம்பராமாயணம் ஒப்புவித்தல் போட்டியில் வெற்றி பெற்ற மாணவிகளுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி பரிசுகளை வழங்கினார். உடன், ‘இந்து’ என்.ரவி, சுதா சேஷய்யன், கே.என்.ராமசாமி, வெங்கடாச்சலம், பி.ஜி.சுப்பிரமணியம் ஆகியோர்.</p></div>
பிஹார் தொழிலாளி, அவரது மனைவி, குழந்தை கொலை: தலைவர்கள் கண்டனம்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in