நீர் பிரச்சினைக்கு நதிகளை இணைப்பதே தீர்வு: ஒகேனக்கல்லில் பிரேமலதா வலியுறுத்தல்

மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடன் சுதீஷ் எம்.பி., விஜய பிரபாகரன் உள்ளிட்டோர்.

மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடன் சுதீஷ் எம்.பி., விஜய பிரபாகரன் உள்ளிட்டோர்.

Updated on
1 min read

தருமபுரி: இரு மாநிலங்​களுக்கு இடையி​லான தண்​ணீர் பிரச்​சினைக்கு நதி​களை இணைப்​பதே தீர்​வாக அமை​யும் என தேமு​திக பொதுச் ​செய​லா​ளர் பிரேமலதா தெரி​வித்​தார்.

காவிரி​யாற்​றின் குறுக்கே மேகே​தாட்டு பகு​தி​யில் அணை கட்ட முயற்​சிக்​கும் கர்​நாடக அரசைக் கண்​டித்து தரு​மபுரி மாவட்ட தேமு​திக சார்​பில் ஒகேனக்​கல்​லில் நேற்று நடந்த ஆர்ப்​பாட்​டத்துக்கு தலைமை தாங்கி அவர் பேசியது: காவிரி நடு​வர் மன்ற உத்​தர​வுப்​படி தமிழகத்​துக்கு விநாடிக்கு 3,500 கனஅடி தண்​ணீர் திறக்​கப்​பட்​டிருக்க வேண்​டும். தமிழகத்​தில் தவெக ஆட்​சி​யில் காங்​கிரஸ் கூட்​ட​ணி​யில் உள்​ளது. கர்​நாட​கா​வில் காங்​கிரஸ் ஆட்சி நடக்​கிறது. எனவே, ராகுல்​காந்தி கர்​நாடகா முதல்​வரை சந்​தித்து தமிழகத்​துக்கு நீர் பெற்​றுத்தர வேண்​டும்.

அதே​போல் தமிழகத்​தின் நீர் உரிமையை நிலை​நாட்ட முதல்​வர் விஜய் கர்நாடகா செல்ல வேண்​டும். அதே​போல் அம்​மாநில முதல்​வர் சிவகு​மார் தமிழகம் வர வேண்​டும் என்றார்.

தொடர்ந்​து, செய்​தி​யாளர்​களிடம் பிரேமலதா கூறியது: இருமாநிலங்​களுக்கு இடை​யில் தண்​ணீர் பிரச்​சினை ஏற்​ப​டா​மல் இருக்க நதி​களை இணைப்​பதே தீர்​வாக இருக்​கும். சுயநலத்துக்​காக கர்​நாடகா கோயிலுக்​குச் செல்​லும் முதல்​வர் மக்​களின் பிரச்​சினைக்​காக போகக் கூடா​தா. மின்மிகை மாநில​மாக இருந்த தமிழகத்​தில் மின்​வெட்டு அதி​கரித்துள்ளது. இவ்​வாறு கூறி​னார்.

முன்​ன​தாக, பிரேமலதா தலை​மை​யில் அக்​கட்​சி​யின் சுதீஷ் எம்​.பி. இளைஞரணி செய​லா​ளர் விஜய பிர​பாகரன் உள்​ளிட்​டோர் பிலிகுண்​டுலு பகு​தி​யில் ஆய்வு செய்​தனர்.

<div class="paragraphs"><p>மேகேதாட்டு பகுதியில் அணை கட்ட முயற்சிக்கும் கர்நாடக அரசைக் கண்டித்து தருமபுரி மாவட்ட தேமுதிக சார்பில் ஒகேனக்கல்லில் கட்சியின் பொதுச் செயலாளர் பிரேமலதா&nbsp;தலைமையில் ஆர்ப்பாட்டம் நடந்தது. உடன் சுதீஷ் எம்.பி., விஜய பிரபாகரன் உள்ளிட்டோர்.</p></div>
“இந்தியாவின் அதிவேக வளர்ச்சிக்கு இளைஞர் சக்தியே முக்கிய காரணம்” - பிரதமர் மோடி பெருமிதம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in