தங்கம் விலை உயர்வு - இன்றைய சந்தை நிலவரம் என்ன?

தங்கம் விலை உயர்வு - இன்றைய சந்தை நிலவரம் என்ன?
Updated on: 
1 min read

சென்னை: சென்னையில் தங்கம் விலை கிராமுக்கு ரூ.35 உயர்ந்து ஒரு கிராம் ரூ.13,570 ஆக விற்பனையாகி வருகிறது.

சர்வதேச பொருளாதார மற்றும் அரசியல் சூழல், கச்சா எண்ணெய் விலை, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு, தங்கத்தின் மீதான முதலீடு, உலக பங்குச் சந்தை செயல்பாடு உள்ளிட்டவற்றின் அடிப்படையில் தங்கத்தின் விலை நிர்ணயிக்கப்படுகிறது.

உலக அளவில் தங்கத்தை இறக்குமதி செய்யும் நாடுகளில் இந்தியா முன்னணியில் உள்ளது. அமெரிக்கா - ஈரான் இடையிலான மோதலின் தாக்கம் உலக பொருளாதாரத்தில் எதிரொலித்து வருகிறது. அது சர்வதேச அளவில் தங்கம் விற்பனையிலும் தாக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

கடந்த மே மாதம் தங்கம் மீதான சுங்க வரியை 6 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக மத்திய அரசு உயர்த்தியது. இதோடு கடந்த செப்.1-ம் தேதி அன்று ‘தேவையின்றி தங்கம் வாங்காதீர்கள்’ என நாட்டு மக்களிடம் பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.

இதையடுத்து தங்கம் விலை சந்தையில் ஏற்ற இறக்கத்துடன் விற்பனை ஆகிறது. இந்த சூழலில் வார விடுமுறைக்குப் பின் இன்று தங்கம் கிராமுக்கு ரூ.35 உயர்ந்துள்ளது.

இன்றைய விலை விவரம்:

இந்நிலையில், சென்னையில் 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை இன்று (அக்.19) கிராமுக்கு ரூ. 35 அதிகரித்து ஒரு கிராம் ரூ.13,570-க்கும், பவுனுக்கு ரூ.280 உயர்ந்து ஒரு பவுன் ரூ.1,08,560-க்கும் விற்பனையாகிறது.

வெள்ளி விலையில் இன்றும் மாற்றமில்லை. ஒரு கிராம் ரூ.240-க்கும். கட்டி வெள்ளி ஒரு கிலோ ரூ.2,40,000-க்கும் விற்பனையாகிறது.

தங்கம் விலை உயர்வு - இன்றைய சந்தை நிலவரம் என்ன?
மதுராந்தகம் அருகே ரூ.20 கோடி மதிப்பீட்டில் புதிய அரசு கல்லூரி - முதல்வர் விஜய் அறிவிப்பு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in