தமிழகம் முழுவதும் 2.36 லட்சம் பேர் எழுதிய முதுகலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு முடிவுகள் வெளியீடு

கோப்புப்படம்

கோப்புப்படம்

Updated on
1 min read

சென்னை: ஆசிரியர் தேர்வு வாரி​யம் நடத்​திய முதுகலை பட்​ட​தாரி ஆசிரியர் தேர்வு முடிவு வெளி​யிடப்​பட்​டுள்​ளது. தமிழ் தகுதித்தாளில் 85 ஆயிரம் பேர் தோல்வி அடைந்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது.

இதுதொடர்​பாக ஆசிரியர் தேர்வு வாரி​யத்​தின் தலை​வர் எஸ்.ஜெயந்தி வெளி​யிட்​டுள்ள செய்​திக்​குறிப்​பு: முதுகலை பட்​டதாரி ஆசிரியர், உடற்​கல்வி இயக்​குநர் (கிரேடு-1), கணினி பயிற்​றுநர் (கிரேடு-1) ஆகிய பதவி​களில் 1,996 காலி இடங்​களை நிரப்​பும் வகை​யில் கடந்த அக்.12-ம் தேதி போட்​டித் தேர்வு நடத்​தப்​பட்​டது.

இதைத்தொடர்ந்​து, இறுதி விடைக்​குறிப்​பு, தேர்வு முடிவு​கள் மற்​றும் ‘1: 1.25’ என்ற விகி​தாச்​சார அடிப்​படை​யில் சான்​றிதழ் சரி​பார்ப்​புக்​கான பட்​டியல் தேர்வு வாரி​யத்​தின் இணை​யதளத்​தில் பாட​வாரி​யாக வெளி​யிடப்​பட்​டுள்​ளது.

சான்​றிதழ் சரி​பார்ப்​புக்கு தகுதி பெற்​றவர்​கள் அதற்​கான அழைப்​புக் கடிதம் மற்​றும் இதர படிவங்​களை இணை​யதளத்தில் பதி​விறக்​கம் செய்​து கொள்ள வேண்​டும். அவை தபால் மூலம் அனுப்​பப்​ப​டாது. இவ்​வாறு அதில் கூறப்​பட்​டுள்​ளது.

முதுகலை ஆசிரியர் தேர்​வில் சம்​பந்​தப்​பட்ட பாடம், கல்வி உளவியல், பொது அறிவு ஆகிய பகு​தி​களில் இருந்து 150 கேள்விகள் இடம்​பெறும். இதற்கு 150 மதிப்​பெண். அதேபோல, கட்டாயத் தமிழ் மொழி தகு​தித்​தாள் தேர்​வில் 30 கேள்வி​களுக்கு 50 மதிப்​பெண். இதில் 40 சதவீத மதிப்​பெண் அதாவது 50-க்கு 20 மதிப்​பெண் பெற்​றால் மட்​டுமே தேர்​வர்​களின் பாட விடைத்​தாள் மதிப்​பீடு செய்​யப்​படும்.

மொத்​தம் 2.36 லட்​சம் பேர் தேர்வு எழு​திய நிலை​யில், தமிழ் தகு​தித்​தாள் தேர்​வில் 85 ஆயிரத்​துக்​கும் மேற்​பட்​டோர் தோல்வி அடைந்​துள்​ள​தாக தகவல் வெளி​யாகி​யுள்​ளது. மேலும், மற்ற அனைத்து பாடத்தேர்வையும் நன்றாக எழு​தி, தமிழ் தகு​தித்​தாளில் தேர்ச்சி பெறாத​தால் வெற்றி வாய்ப்​பை இழந்​த தேர்வர்​களு​ம்​ இதில் உள்​ளனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப்படம்</p></div>
2026 ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பாமக தலைவர்: ராமதாஸ் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in