2026 ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பாமக தலைவர்: ராமதாஸ் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு

2026 ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பாமக தலைவர்: ராமதாஸ் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு
Updated on
1 min read

சென்னை: பாமக-​வின் தலை​வ​ராக அடுத்த ஆண்டு ஆகஸ்ட் வரை அன்​புமணி​தான் தொடர்​வார் என்று அறி​விப்பு வெளி​யிட்ட தேர்​தல் ஆணை​யம், கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் அளித்த மனுவை நிராகரித்து உத்​தர​விட்​டுள்​ளது.

பாமக-​வில் அக்​கட்​சி​யின் நிறு​வனர் ராம​தாஸ் மற்​றும் தலை​வர் அன்​புமணி இடையே தொடர்ந்து மோதல் போக்கு நிலவி வரு​கிறது. தந்​தைக்​கும் மகனுக்​கும் இடையே நடந்து வரும் மோதலால் கட்​சி​யினர் இரு பிரிவு​களாக செயல்​பட்டு வரு​கின்​றனர். இருதரப்பினரும் தங்களுக்கு சாதகமானவர்களை நிர்வாகிகளாக நியமித்து அறிவிப்பு வெளியிட்டனர். இதன் ஒரு பகுதியாக, கட்சியின் செயல் தலைவராக மகள் காந்திமதியை ராமதாஸ் நியமித்தார்.

மேலும், கட்​சியை கைப்​பற்ற இரு தரப்​பினரும் சில மாதங்​களுக்கு முன்பு பொதுக்​குழுவை கூட்டி தீர்​மானங்​களை நிறைவேற்​றினர். இதன் தொடர்ச்சியாக, தலை​மைத் தேர்​தல் ஆணை​யத்​தை​யும் அணுகினர். இதில், அன்​புமணி தலை​மையி​லான பாமக-வை தேர்​தல் ஆணை​யம் அங்​கீகரித்​தது. அதோடு 2026-ம் ஆண்டு ஆகஸ்ட் வரை கட்​சி​யின் தலை​வ​ராக அன்​புமணி தொடர்​வார். பாமக சார்​பில் தேர்​தலில் போட்​டி​யிடும் வேட்​பாளர்​களின் ‘ஏ’ மற்​றும் ‘பி’ படிவங்​களில் கையெழுத்​திடும் அதி​கார​மும் அவருக்​குத்​தான் உள்​ளது என தேர்​தல் ஆணை​யம் அறி​வித்​தது. இதனை தொடர்ந்து தேர்​தல் ஆணை​யத்தை அணுகி மாம்​பழம் சின்​னத்தை அன்​புமணி தரப்​பினர் பெற்​றனர்.

இதனால், கடும் கோபம் அடைந்த ராம​தாஸ் பாமக​வின் தலை​வர் அன்​புமணி இல்லை என்​றும், அவரது பதவி காலம் ஏற்​கெனவே முடிந்து விட்​டது எனவும் தேர்​தல் ஆணை​யத்​திடம் முறை​யிட்​டார். ஆனால், தேர்​தல் ஆணை​யம் ராம​தாஸ் தரப்பு மனுவை நிராகரித்​தது.

இதுதொடர்​பாக டெல்​லி​யில் அக்​கட்​சி​யின் கவுரவ தலை​வர் ஜி.கே.மணி செய்​தி​யாளர்​களிடம் கூறும்​போது, ‘அன்​புமணி தரப்பு போலி​யான ஆவணங்​களை தேர்​தல் ஆணை​யத்​திடம் சமர்ப்​பித்​தது. அதன் அடிப்​படை​யிலேயே அவருக்கு தேர்​தல் ஆணை​யம் அங்​கீ​காரம் வழங்கி உள்​ளது. தேர்​தல் ஆணை​ய​மும் அன்​புமணி​யுடன் சேர்ந்​து, அவருக்கு ஆதர​வாக செயல்​பட்​டுள்​ளது. தேர்​தல் ஆணை​யம் செய்​திருப்​பது ஜனநாயக படு​கொலை. இதனை கண்​டித்து டெல்​லி​யில் தேர்​தல் ஆணை​யம் முன்பு போ​ராட்​டம்​ நடத்​தப்​படும்​’ என்​றார்​.

2026 ஆகஸ்ட் வரை அன்புமணிதான் பாமக தலைவர்: ராமதாஸ் மனுவை நிராகரித்து தேர்தல் ஆணையம் அறிவிப்பு
உணவுத் துறையை மேம்படுத்த அரசு தீவிர நடவடிக்கை: அமைச்சர் டி.ஆர்.பி.ராஜா தகவல்

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in