ஈரானில் தவிக்கும் தமிழக மீனவர்களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும்: வைகோ வலியுறுத்தல்

வைகோ | கோப்புப் படம்
வைகோ | கோப்புப் படம்
Updated on
1 min read

சென்னை: ஈ​ரானில் சிக்​கித் தவிக்​கும் 700 தமிழக மீனவர்​களை மீட்க நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மதி​முக பொதுச்​செய​லா​ளர் வைகோ வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

இதுகுறித்து அவர் வெளி​யிட்ட அறிக்​கை: குமரி மாவட்​டம் கடியப்​பட்​ட​ணம், குளச்​சல், இணை​யம் மற்​றும் முட்​டம் உட்பட பல்​வேறு பகு​தி​களைச் சேர்ந்த 60 மீனவர்​கள் ஈரானில் பணி​யாற்றி வரு​கின்​றனர். மேலும் தூத்​துக்​குடி, நெல்​லை,ராம​நாத​புரம், கடலூர் மாவட்​டங்​களைச் சேர்ந்த 600-க்​கும் மேற்​பட்​டோர் ஈரானில் பணிபுரி​கின்​றனர். இவர்​கள் அனை​வரும் அச்​சத்​தில் உள்​ளனர்.

தற்​போது அமெரிக்​கா, இஸ்​ரேல் நாடு​கள் ஈரான் நாட்​டின் மீது போர் தொடுத்​துள்​ள​தால் ஈரானில் எங்​கள் சகோ​தரர்​கள் பாது​காப்​பற்ற சூழலில் தவிக்​கின்​றனர்.

எனவே தமிழக மீனவர்​களை சிறப்பு விமானங்​கள் அல்​லது கப்​பல்​கள் மூலம் விரைந்து மீட்க மத்​திய அரசு நடவடிக்கை மேற்​கொள்ள வேண்​டும். இவ்​வாறு வலி​யுறுத்​தி​யுள்​ளார்.

பாஜகவினர் மனு: ஈரான் - இஸ்​ரேல் போர் பதற்​றம் காரண​மாக, தூத்​துக்​குடி, நெல்​லை, கன்​னி​யாகுமரி மாவட்​டங்​களை சேர்ந்த 700-க்​கும் மேற்​பட்ட மீனவர்​கள், தமிழகம் திரும்ப முடி​யாமல் ஈரானில் சிக்கி தவிக்​கின்​றனர்.

அவர்​களுக்கு தேவை​யான உதவி​களை செய்​து, தமிழகத்​துக்கு மீட்டு கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்​டும் என மத்​திய அரசுக்கு தமிழக பாஜக மீனவர் அணி கோரிக்கை விடுத்​துள்​ளது. இது தொடர்​பாக பாஜக மீனவர் அணி மாநில தலை​வர் ஏ.சீ​மா, பாதிக்​கப்​பட்ட மீனவர்​களின் குடும்​பத்​தினரோடு நேற்று சென்​னை​யில் கட்​சி​யின் மாநில தலை​வர் நயி​னார் நாகேந்​திரனை சந்​தித்து கோரிக்கை மனுவை அளித்​தார்.

வைகோ | கோப்புப் படம்
“ராகுல் காந்தி பாஜகவின் பி-டீம்” - கேரள முதல்வர் பினராயி விஜயன் சாடல்!

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in