சிறப்பு ‘டெட்’ தேர்வை ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டுகோள்

சிறப்பு ‘டெட்’ தேர்வை ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டுகோள்
Updated on
1 min read

சென்னை: பட்​ட​தாரி ஆசிரியர் கழகத்​தின் நிறு​வனர் அ.மாய​வன், நிறுவன தலை​வர் சி.ஜெயக்​கு​மார், பொதுச்​செய​லா​ளர் மா.குமரேசன் உள்​ளிட்டோர் பள்​ளிக்​கல்வி அமைச்​சர் ராஜ்மோகனை சந்​தித்​துப் பேசினர். அப்​போது ‘டெட்’ தேர்வு தொடர்​பான மனுவை அளித்​தனர்.

அந்த மனு​வில் கூறப்​பட்​டிருப்​ப​தாவது: இலவச கட்​டாய கல்வி உரிமைச் சட்​டம் அமல்​படுத்​தப்​படு​வதற்கு முன் பணி​யில் சேர்ந்​தோருக்கு டெட் தேர்​வில் இருந்து உச்ச நீதி​மன்​றம் விலக்கு அளிக்​கும் என்ற நம்​பிக்​கை​யில் இருந்​தனர்.

ஆனால் அனைத்து ஆசிரியர்​களுக்கும் டெட் தேர்ச்சி கட்​டா​யம் என தீர்ப்பு வழங்​கப்​பட்​டது. அதனால் ஜூலை​யில் நடை​பெற உள்ள டெட் தேர்​வுக்கு ஆசிரியர்​கள் எவ்​வித தயாரிப்​பும் செய்​ய​வில்லை.

எனவே, ஜூலை​யில் நடத்​தப்பட இருக்​கிற சிறப்பு டெட் தேர்வை ஒரு மாதம் தள்​ளிவைக்க வேண்​டும். கட்​டாய கல்வி உரிமைச் சட்​டம் அமல்​படுத்​தப்​படு​வதற்கு முன் பணி​யில் சேர்ந்த ஆசிரியர்​களுக்கு இரண்​டாண்டு பணிக்​காலத்​துக்கு ஒரு மதிப்​பெண் என்று கணக்​கிட்டு அந்த மதிப்​பெண் அவர்​களின் டெட் தேர்வு மதிப்​பெண்​ணுடன் சேர்த்து தேர்ச்சி அறிவிக்க வேண்​டும்.

தற்​போது உச்ச நீதி​மன்​றம் டெட் தேர்ச்சி பெறு​வதற்கு 2028 வரை அவகாசம் வழங்​கி​யிருப்​ப​தால் பள்​ளிக்​கல்​வித் துறை பட்​ட​தாரி ஆசிரியர்​களின் முன்​னுரிமை பட்​டியலை விரை​வாக தயாரித்து அவர்​களுக்கு பதவி உயர்வு வழங்க வேண்​டும்.

சிறப்பு ‘டெட்’ தேர்வை ஒரு மாதம் தள்ளிவைக்க வேண்டுகோள்
விளம்பர பலகை உரிமம் முறைகேடு புகார்: 2 வாரங்களில் விசாரணையை முடிக்க சென்னை மாநகராட்சிக்கு ஐகோர்ட் உத்தரவு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in