300 பெண் கால்நடை உதவி மருத்துவர்கள் பாதிக்காமல் பொது மாறுதல் கலந்தாய்வை நடத்த கோரிக்கை

கோப்புப் படம்

கோப்புப் படம்

Updated on
1 min read

சென்னை: 300 பெண் கால்​நடை உதவி மருத்​து​வர்​கள் பாதிக்​கப்​ப​டாத வகை​யில் பொது மாறு​தல் கலந்​தாய்வை நடத்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என்று தமிழக முதல்​வருக்கு கோரிக்கை விடுக்​கப்​பட்​டுள்​ளது.

தமிழ்​நாடு அரசு கால்நடை பராமரிப்​புத் துறை​யில் 3,300 கால்நடை உதவி மருத்​து​வர்​கள் பணி​யாற்றி வருகின்றனர். இவர்​களில் 50 சதவீதத்​துக்​கும் மேற்​பட்​டோர் பெண் கால்​நடை உதவி மருத்​து​வர்​கள் ஆவர்.

இந்​நிலை​யில் மாநில அளவி​லான சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் பொது மாறு​தல் கலந்​தாய்வு நடத்​தத் திட்​ட​மிடப்​பட்​டுள்​ளது. 30 சதவீத மகளிர் இட ஒதுக்​கீடு மூலம் பணிக்கு வந்​துள்ள பெண் கால்நடை உதவி மருத்​து​வர்​கள் மாநில அளவி​லான சீனி​யாரிட்டி பட்​டியலில் கடைசி​யில் உள்​ளனர்.

பொது கலந்​தாய்வு மாநில அளவி​லான சீனி​யாரிட்டி அடிப்​படை​யில் நடத்​தப்​பட்​டால் 400-க்​கும் மேற்​பட்ட பெண் கால்​நடை உதவி மருத்​து​வர்​கள் தங்​கள் குடும்​பங்​களைப் பிரிந்து வெவ்​வேறு மாவட்​டங்​களுக்​குச் செல்​லும் நிலை ஏற்​பட்​டுள்​ளது.

சுகா​தா​ரத் துறை​யில் உள்​ளது போல், நிலைய பணி மூப்பு அடிப்​படை​யில் மாவட்​டங்​களுக்​குள் முதல் நாளும், மாவட்​டங்​களுக்கு இடையே அடுத்த நாளும் பொது மாறு​தல் கலந்​தாய்வு நடத்​தப்​பட்​டால் பெண் கால்​நடை உதவி மருத்​து​வர்​கள் பாதிக்​கப்​படு​வது தடுக்​கப்​படும்.

எனவே தமிழக முதல்​வர் உடனடி​யாக இந்​தப் பிரச்​சினை​யில் தலை​யிட்டு 300 பெண் கால்​நடை உதவி மருத்​து​வர்​களின் குடும்​பங்​களை காப்​பாற்ற வேண்​டும் என்று பெண் கால்​நடை உதவி மருத்​து​வர்​கள்​ கோரிக்​கை வைத்​து உள்​ளனர்​.

<div class="paragraphs"><p>கோப்புப் படம்</p></div>
தவெக பெண் நிர்வாகிகள் குறித்து சர்ச்சைப் பேச்சு: பொன்ராஜ் மீது சென்னை, கடலூரில் வழக்கு

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in